பக்கம்:மானிட உடல்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 மானிட உடல் குறைவதுடன் இயல்புக்கு மாருன முறையில் நரம்பு மண்ட லம் செயற்பட்டு ஈர்ப்பு வாதமாகப் பரிணமிக்கின்றது. புரிசைத் துணைச் சுரப்பிகளினின்று உண்டாகும் ஹார் மோன் பாராகார்மோன் என்று வழங்கப்பெறுகின்றது. இந்தச் சுரப்பிகளினின்றும் அது சுறுசுறுப்பான தன்மை யுடன் பிரித்தெடுக்கப் பெறுகின்றது. பாாாதார்மோன் அதிகமாக உற்பத்தியானல் அது குருதியிலுள்ள கால்சிய அளவினே அதிகரிக்கச் செய்கின்றது ; இதனுல் எலும்புக் கூட்டிலுள்ள உப்பு சற்றுக் கசைகின்றது. புரிசைத் துணைச் சுரப்பிகளுள் ஒன்றில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றில் கட்டி உண்டானல் இந்நிலை ஏற்படுகிறது. குருதியிலுள்ள அதிகமான கால்சியச் சத்தை சிறுநீரகங்கள் போன்ற வேறு உறுப்புக்களில் படியச் செய்து அவை செயற்படுவதைக் கெடுக்கின்றன. புரிசைத் துணைச் சுரப்பிகள் அடித்தலை முன்சுரப்பியால் கட்டுப்படுத்தப் பெறவில்லை. இன்னும் உறுதியாக நிர்ணயிக் கப் பெருவிடினும், குருதியிலுள்ள கால்சியம்தான் புரிசைக் துணைச் சுரப்பிகள் செயற்படுவதை ஒழுங்குபடுத்துகின்றது என்று தெரிகின்றது. குருதியிலுள்ள கால்சிய அளவு அதி கப்படும்பொழுது, பாராகார்மோன் சுரப்பது கடைப்படுத் தப் பெறுகின்றது. குருதியிலுள்ள கால்சியக் குறைவு அதிக மான பாாாதார்மோன் சுரப்பதைத் தாண்டுகிறது. அண்மையில் டைஹைட்சோடாசிஸ்டெரால் என்ற ஒரு ஸ்டெராய்டு பொருள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது. அது பாாாதிார்மோன் உண்டாக்கும் விளைவுகளைப் போன்ற விளைவுகளே உண்டாக்குகின்றது. இந்தப் பொருளின் விலை யும் குறைவு ; உடலில் செலுத்துவதற்கும் பிசித பாாதார் மோனைவிட எளிதானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/180&oldid=865974" இலிருந்து மீள்விக்கப்பட்டது