பக்கம்:மானிட உடல்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் இனப்பெருக்க மண்டலம் 165 சென்று சிறுநீர்ப் புறவழியினுள் காலி செய்கின்றன. இங்கு சிறுநீர்ப் புறவழி சிறுநீருக்கும் விரைச்சாறு அல்லது விந்து வுக்கும் பொதுச் சாலகமாக அமைகின்றது. எனினும், சிறு நீர் மண்டலத்திற்கும் இனப்பெருக்க மண்டலத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. வாய் காற்றையும் உணவையும் கடத்தினுலும் நுரையீரல்களும் இாைப்பையும் என்ன தொடர்பைப் பெற்றிருக்கின்றனவோ அதே தொடர்புதான் இவற்றிற்கும் உண்டு என்று இவற்றின் தொடர்பை ஒப்பிட் டுக் காட்டி உணர்த்தலாம். விந்துப் பைகள் சிறுநீர்ப் பையினுடைய கழுத்தின் பின்புறம் சுருண்ட நிலையிலுள்ள இரண்டு பைகள் தாம் (படம்-48.) இந்த விந்துப் பைகள். அவை பழைய நாளைய ர்ேக் துருத்திகள்போல் உள்ளன. அவை சுரக்கும் ஒட்டுந்தன்மையுள்ள பாய்மந்தான் விந்துவின் பெரும் பகுதியாகும். அது விாைப்புழுக்களைப் பாதுகாப்பதற்கு காத்தன்மையுட னிருக்கின்றது. புராஸ்டேட் சுரப்பி சிறுநீர்ப் புறவழி சிறுநீர்ப் பையிலிருந்து வெளிப்படு மிடத்தில் அதன் கழுத்தைச் சுற்றிலுமுள்ள (படம் , 49) மிகப் பெரிய ஆண் பாலறி-துணையமைப்புதான் புராஸ்டேட் சுரப்பியாகும். புராஸ்டேட் என்பது ஒரு அகண்ட, முன் புறம் குட்டையான, இதய வடிவமுள்ள உறுப்பு. அது நார்த் தசையுள்ள இணைக்கும் இழையத்தால் சூழப்பெற்ற சளிச் சுரக்கும் சுரப்பிகளாலானது. அச் சுரப்பிகளும் இழை யமும் ஹார்மோன்களால் பாதிக்கப்பெறுகின்றன ; அவற் றின் பருமனும் எண்ணிக்கையும் விரகறியும் பருவத்தில் அதிகரிக்கின்றன. புராஸ்டேட்டிற்கு மிக அருகில் பின்புறமாக மலக்குடல் அமைந்துள்ளது. மருத்துவர் மலக்குடலைப் பரிசோதிக்கும் பொழுது தன் விரலால் புராஸ்டேட்டைத் தொட்டு அறிதல் எளிது. அதன் அளவையும் வடிவத்தையும்கூட அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/189&oldid=865992" இலிருந்து மீள்விக்கப்பட்டது