பக்கம்:மானிட உடல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பொதுக் குறிப்புக்கள் 11 " ஒழுங்குபடுத்தல் ” என்று கூறலாம். அஃதாவது, ஒரு ட்டமான முறைப்படி பல அமைப்புக்கள் உண்டாதல்தான் அது. பிரத்தியேகமான உயிர் அணுக்களின் வளர்ச்சியால் மட்டிலும் ஒழுங்குபடுத்தல் நடைபெற முடியாது ; அதற்கு சட்டகம்போல் உதவக் கூடிய இணைக்கும் இழையங்களின் நார்கள் தேவை. உடலின் வெளிப்புறத்தில் இழைய இயல் முறையில் சிறு நீாகத்தின் உயிரணுக்களை உண்டாக்கினல், அவை ஏடுகள்போல் வளருமேயன்றி உடலினுள் வளர்வன போல் குழல் வடிவங்களாக வளர்வதில்லை. ஒருசில இணைக் கும் இழைய உயிரணுக்களே அவற்றுடன் சேர்த்தால், சிறு ாேக உயிரணுக்கள் ஒழுங்குபடுத்தப்பெற்ற அமைப்புக்க ளாக வளரக் கூடும். இணைக்கும் இழையம் இணைக்கும் இழையத்தின் பெயரிலிருந்தே அதன் சிறப் பியல்பினைக் கண்டறியலாம். கிட்டத்தட்ட உடலின் எல்லாப் பகுதிகளிலும் அது காணப்படும். அது எல்லா உள்ளுறுப்புக் களிலும் தனிப்பட்ட இயக்கத்தை யுடைய அமைப் பு க் க ளே ச் சூழ்ந்துள்ள இழை யங்களிலும் உறைக ளாகவும், வால்வுக ளாகவும, பாதகங்க ளாகவும், தசை நார் களாகவும் அமைகின் படம் 4. றன. உள்ளுறுப்புக் அரியோலர் இணைக்கும் இழையம். களிடையே மெத்தை போன்று அமைக் திருக்கும் நெகிழ்ந்த வலைக்கண் போன்ற (படம் - 4) அமைப்புக்களிலிருந்து கெட்டியான கயிறுகள் போன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/19&oldid=865994" இலிருந்து மீள்விக்கப்பட்டது