பக்கம்:மானிட உடல்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் இனப்பெருக்க மண்டலம் 167 வேகமாக வெளியில் கள்ளப் பெறுகின்றது. இச் செயல் இணைக்கும் தசை - , துவள் இழையங்களின் சுருக்கத்தால் நடைபெறுகின்றது. ஆண் குறி வெளியில் புடைப்பாகத் தெரிவதில் பெரும் பகுதி (படம் - 89) இரண்டு நீளமான தசைப் பிழம்புகளாலான நிகரற்ற அமைப்பினலானது; அந்த அமைப்பைக் கார் போரா கேவர்னுேஸா’ என்று வழங்குவர். அந்தத் தசையில் பல குருதிக் குழல்கள் அமைந்துள்ளன. சாதாரணமாக, அக் குழல்கள் சுருங்கி ஒடுங்கிய நிலையில்தான் இருக்கும்; ஆனல், அவை விரைவில் கிரம்பிக்கொள்ளக் கூடியவை; இதனுல் ஆண் குறி பெருக்க மடைந்து காணப்படும். இவ்வாறு உறுதியாக விரைத்து நிற்கும் உறுப்பு விந்துவைப் பெண் குறியின் ஆழ மான பகுதியில் செலுத்துவதற்குத் தயாராக இருக்கிறது என் பதைக் காட்டுகிறது. ஆண் குறியின் பின்புறத்தில் மூன்ரு வதாக ஒரு சிறிய தசைப்பிழம்பின் நீட்டம் காணப்படுகிறது; அதனைக் கார்ப்பஸ் ஸ்பான்ஜியோஸம் என்று வழங்குவர். அது சிறு நீர்ப்புற வழியைச் சூழ்ந்துகொண் டிருக்கின்றது. ஆண் குறி நெகிழ்ச்சியான, அளவிற்கதிகமான தோலினல் போர்த்தப் பெற்றுள்ளது ; அது ஆண் குறி தளர்ந்த நிலையி விருந்து விாைத்த நிலைவரைக்கும் உள்ள பல்வேறு நிலை களில் ஏற்படும் மாறுபாட்டிற் கேற்றவாறு இடங் கொடுத்து நிற்கிறது. துனித் தோல் வெட்டப்பெருத நிலையிலுள்ள ஓர் ஆண் உறுப்பில், அத்தோல் உறுப்பின் உறுதியான குமிழ் போன்ற முகட்டை-ஆண் குறியின் துனியை - மூடிக்கொண் டிருக்கிறது. சுன்னத்து செயல் அதிகப்படியான துணித் தோலை நீக்கிவிடுகிறது. விந்து பாய்ச்சுதல் இது முக்கியமாக ஒரு மடக்குச் செயலாகும் : அச் செயல் பொறி யுணர்ச்சிகளுடன் தொடர்புள்ளது ; அப் பொறி யுணர்ச்சியை மன வெழுச்சி ’ என்று வழங்குவர்.

  • Orgasm.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/191&oldid=865998" இலிருந்து மீள்விக்கப்பட்டது