பக்கம்:மானிட உடல்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் இனப் பெருக்க மண்டலம் 11 ஆண் இனப் பெருக்க உறுப்புகளைப் போலவே பெண் இனப் பெருக்க உறுப்புக்களும் ஹார்மோன்களைப் பிரயாசைப் பட்டு உண்டாக்க வேண்டும் ; பிரத்தியேகமான பாலறி உயி ானுக்களே உற்பத்தி செய்ய வேண்டும் ; முட்டையும் விரைச் சாறும் சந்திப்பதற்கேற்றவாறு தெளிவான வழியையும் பெற்றிருக்க வேண்டும். அன்றியும், பெண் உறுப்புக்களின் நிகரற்ற செய்கை யாதெனில், கரு அணுக்களுக்குப் புகலிடம் தந்து கருப்பிண்டம் தானுக வெளியில் இயங்கும் நிலைபெறும் வரையிலும் அதனை ஊட்டம் கொடுத்து வளர்ப்பதாகும். பெண் இனப் பெருக்க மண்டலத்திலுள்ள எல்லா உறுப்புக்களும் இடுப்பறையினுள் அமைந்திருக்கின்றன : இடுப்பறை இடுப்பெலும்புகளாலும் முதுகந் தண்டின் கீழ் துனிப்பாகத்திலும் உண்டான கிண்ணம் போன்ற உள் வ வுள்ள இடமாகும் (புகைப்படம் - கஎ-ஐப் பார்க்க). இந்த உறுப்புக்கள் யாவும் அசையாக நிலையில் ஒரிடத்தில் நாட்டப் பெற்றிருக்கவில்லை. ஆனல், அவை கருப்பமுற்றிருக்கும் பொழுது மிகப்பெரிதாகுங்கால் இடுப்பறையிலிருந்து வயிற்றி னுள் நீண்டு செல்வதற்கேற்றவாறு வளையும் தன்மையைப் பெற்றுள்ளன. சூற்பைகள், கருக்குழல்கள், கருப்பையின் மேற் பகுதி ஆகியவற்றை வபை மூடிக்கொண்டுள்ளது ; ஆனல், அது சிறுநீர்ப் பையின் முன்புறமும் மலக்குடலின் பின்புறமும் பின்புறமாகத் திருப்பப் பெற்றுள்ளது. ஒரு மருத்துவர் தன் நோயாளியைக் கீழிருந்து பரிசோதிக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/193&oldid=866002" இலிருந்து மீள்விக்கப்பட்டது