பக்கம்:மானிட உடல்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் இனப்பெருக்க மண்டலம் 17 f அமைந்துள்ளன. மெல்லிய சவ்வு போன்ற அகன்ற பந்தக மொன்று கருப்பையிலிருந்து இடுப்பு எலும்புக் கட்டு வரை யிலும் விரிந்த நிலையிலுள்ளது. இங்கப் பந்தகம் சூற்பைகளைத் தாங்கி அவற்றை மூடிக்கொள்வதற்கும் சூற்பைகளுக்கும் கருப்பைக்கும் வரும் முக்கியமான குருதி, நரம்பு ஆகியவற். றைத் தருவதற்கும் அமைந்துள்ளது. அதை வெளவாலின் சிறகுகளுக்கு ஒப்பிடலாம். இந்த உறுப்புக்களின் அமைப்பும் இயங்கும் முறையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. காரணம், பருவ முறைப்படி வளரும் கரு அணுவின் வளர்ச்சியில் ஒரு வட்ட இயல்பில் கவனத்திற்குரிய மாற்றங்கள் நேரிடுகின்றன. வெவ்வேறு இனப் பெருக்க உறுப்புக்களுடன் இந்த மாற்றங்கள் ஒன்ருே டொன்று தொடர்புகொண்டுள்ளன. சூற்பைகள் ஆங்கிலத்தில் இவற்றை ஒவரிஸ் என்று வழங்குவர். முட்டை வடிவம் போன்ற இந்த இரண்டு அமைப்புக்களும் இடுப்பறை உறுப்புக்களுக்கு இரு புறமும் பக்கத்திற் கொன்ருக அமைந்துள்ளன (படம் - 50). குழவிப் பரு வத்தில் அவை வழுவழுப்பாக வெண்மையான ஒளிபுகா பாப் பைக் கொண்டுள்ளன. இனப் பெருக்கத்திற்குரிய பருவத் தின் பொழுது, அஃதாவது விரகறியும் பருவத்திற்கும் சூதக ஒய்விற்கும் இடையிலுள்ள காலத்தில், சூற்பைகள் கிட்டத் கட்ட உரிக்காக வாதுமைக் கொட்டை அளவு காணப் படுகின்றன. அவற்றின் மேற்பரப்பு படிப்படியாக குழிந்து கொண்டே வரும். இக் குழிகள் கரு அணுக்கள் வெளிப் பட்டதால் ஏற்பட்டவை. பிற்காலத்தில் அவை செயற்படாத நிலையில் அவை குறுகிச் சுருங்கி மடிப்புள்ள பாப்பினைக் கொண்டிருக்கும். பெண் இளஞ் சூலில் சூற்பைகள் முளேத்து வரும் ஒரு எபிதீலிய படலத்தினுல் போர்த்தப் பெற்றுள்ளன. சூற். பையின் இளஞ்சூல் வளர்ச்சி பெறுங்கால், முளைத்து வரும் இந்தப் படலம் உறுப்பினுள் அழுந்தி முதிர்ச்சி அடையாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/195&oldid=866006" இலிருந்து மீள்விக்கப்பட்டது