பக்கம்:மானிட உடல்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 மானிட உடல் கரு அணுக்களாகிய ஆகி பாலமி - அணுக்கள் ஆகின்றன. குழந்கை பிறக்கும்பொழுது சூற்பையில் பல தாருயிரக் கணக்கில் கரு அணுக்கள் நிறைந்துவிடுகின்றன. அவற்றுள் ஒரு நானுாறு அணுக்கள் மட்டிலுமே இனப் பெருக்க ஆண்டுகள் வருங்கால் முதிர்ச்சி யடையும் தன்மையைப் பெறுகின்றன. முதிர்ச்சியுருத கரு அணுக்கள் உயரிய உயிரணுக் களுள்ள இனக்கும் இழையத்தாலான படுக்கையில் அமைக் துள்ளன. இவ்விழையம் பொதுவாகத் தாங்கி கிற்கும் இழையம்போல் அமைவதில்லை. இது பெண் பாலறி ஹார் மேரன்களின் ஆட்சியினுள் அடங்கி யிருக்கின்றது. இந் நிலை யில் சூற்பைகளும் விசைகளும் ஒரே மாதிரியாக உள்ளன. இரண்டும் பிரத்தியேகமான பாலறி - அணுக்களே உண்டாக்கு கின்றன; திட்டமான ஹார்மோன்களையும் பெருக்குகின்றன. இந்த அணுக்களும் ஹார்மோன்களும் பாலறி பண்புகளுக் குக் காரணமாகவுள்ளன. ஆணிடமும் பெண்ணிடமும் விசகறி பருவத்தில் பாலறி - அணுக்கள் பக்குவமடையக் தொடங்கி வெளிப்படுத்தப் பெறுகின்றன. இந் நிலையில் ஹார்மோன் உற்பத்தியும் சுறுசுறுப்பாக நடைபெறுகின்றது. ஆனல், ஆணிடம் விாைச்சாறு பக்குவமடைதல் தொடர்ந்து நடை பெறுவதுடன் ஏராளமாகவும் உண்டாகின்றது. பெண்ணிடம் கரு அணுக்கள் பக்குவப்படுதல் குறிப்பிட்ட பருவங்களில் மட்டிலும் ஒர் அளவுடன் நடைபெறுகின்றது. அத்தகைய குறிப்பிட்ட பருவந்தான் மாதவிடாய் வட்டம்t என்று எளி தாக அறிய முடிகிறது; அப்பருவம், முதல் குருதி யொழுக்கு தொடங்குவதிலிருந்து அடுத்த குருதி யொழுக்கு தொடங் கும் வாையி லுள்ள காலமாகும். வழக்கமாகப் பெரும் பாலான பெண்களிடம் இது இருபத்தைந்து நாட்களிலிருந்து முப்பது நாட்கள் வரையிலும் உள்ளது ; முறைப்படி மாத விடாய் நடைபெருத நிலைகளையும் நாம் அடிக்கடி காணுமல் இல்லை. இந்த மாதவிடாய்க் காலத்தில் ஒவ்வொரு உறுப்பிலும் ஏக காலத்தில் நடைபெறும் மாற்றங்களைக் காண்போம்.

  • Primitive sex cells. # Menstrual cycle.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/196&oldid=866008" இலிருந்து மீள்விக்கப்பட்டது