பக்கம்:மானிட உடல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மானிட உடல் தசைநார்கள் வரையிலுமுள்ள அமைப்புக்களில் உள்ள இணைக்கும் இழையம் பண்புகளில் வேறுபடுகின்றது. இணைக்கும் இழையம் மூன்று வகைப்பட்ட நார்களேயுடை யது (படம்.5). மிக மெல்லிய நார்களே செடிகுவின் நார்கள்’ படம் 5. சுரப்பிகளுக்கிடையிலுள்ள நார்போன்ற இணைக்கும் இழையம். 43] 65f வழங்குவர். அவை எல்லா உறுப்புக்களிலும் வலைக்கண் கள்போல் சூழ்ந்து அவற்றைத் தாங்கும் அமைப்புக்களாகப் பயன்படுகின்றன. பளுவான கார்கள் கொல்லாஜென் என்ற பொருளாலானவை. அவை உள்ளுறுப்புக்களைச் சூழ்ந்துள்ள உறைகளாகவும் கெட்டியான சட்டகமாகவும் அமைகின்றன. விரியவும் சுருங்கவும் நேரிடக்கூடிய இடங்களிலுள்ள இழை யங்கள் துவளும் நார்களால் ஆனவை ; இந் நார்கள் இலாஸ் டின் என்ற பொருளால் ஆனது. குருதிக் குழல் சுவர்கள், துரையீரல், தோல் ஆகிய இடங்களில் இவற்றைக் காணலாம். ஏதோ ஒருவிதத்தில் இந்நார்கள் இணைக்கும் இழையங் களின் பைப்சோபிளாஸ்ட்டுகள், பைப்ரோசைடிஸ் என்ற உயிரணுக்களுடன் தொடர்புள்ளவை. இக்கார் எவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/20&oldid=866016" இலிருந்து மீள்விக்கப்பட்டது