பக்கம்:மானிட உடல்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 மானிட உடல் , பெற்ற ஆராய்ச்சிகளுள் ஒன்று அக் கருக்குழல்கள் திறந் அள்ளனவா, அன்ரு என்று கண்டறிவதாகும். கருப்பை இந்த உறுப்பின் ஒரே செயல் வளர்ச்சியுறும் கருப் பிண்டத்தைப் பாதுகாப்பதாகும். இது கிட்டத்தட்ட தலை கீழாகவுள்ள கட்டையான முந்திரிப் பழத்தின் வடிவத்தை யொத்துள்ளது. உடலில் இயல்பான நிலையில் அது சிறி தளவு முன் புறமாகச் சாய்ந்திருக்குமாறு அமைக்கப் பெற்றிருக்கிறது , ஒரளவு சிறுநீர்ப் பையை மூடிக்கொண்டு மிருக்கிறது. (புகைப் படம் கஎ-ஐப் பார்க்க.) இவ்வாறு கருப்பை சிறுநீர்ப் பையுடன் மிக நெருங்கியிருப்பதால் அது கருப்ப காலத்தின்பொழுது பெரிதாகுங்கால் சிறுநீர்ப்பையை அமுக்குவதற்குக் காரணமாகின்றது. கருப்பை மிகவும் உறுதியான கசையாலானது ; அது கருப்ப காலத்தில் மிகப் பெரிதாக விரிந்துகொடுக்கவும் பல மாக சுருங்கவல்லதுமாக அமைந்திருக்கின்றது. தசைச்சுவ ரில் சகா சிறிதளவு சுருக்கங்கள் இருந்துகொண்டே யிருக் கின்றன. அவை மிகப் பலமாக இருந்தால் சிறிதளவு அசெள கர்யத்தையும் அனுபவிக்க நேரிடலாம். கருப்பையின் உள்ளறை மேற்புறத்தில் சினைக்குழல்க ளுடனும் கீழ்ப்புறக்கில் யோனிக்குழலுடனும் சேர்ந்திருக் கின்றது. கருப்பையின் மேற்புறத்திலுள்ள மூன்றில் இரண்டு பாகம் சுரப்பியுடன் கூடிய இழையத்தாலும் பிரத்தியேகமான இணைக்கும் இழையத்தாலும் போர்த்தப்பெற்றிருக்கின்றது. இந்த இரண்டு வகை இழையங்களும் ஹார்மோனல் பாதிக் கும் அளவுக்கு மிகவும் உணர்ச்சியுள்ளவை. இந்த அனைச் சவ்வு எண்டோமெட்ரியம் என்று வழங்கப் பெறுகின்றது. இந்தச் சவ்வு குழந்தை வளரக்கூடிய கருப்பையின் உடலில் மட்டிலுந்தான் காணப்பெறுகின்றது. கருப்பையின் கீழ்ப் பகுதியிலுள்ள மூன்றில் ஒரு பாகம் யோனிக் குழலினுள் துருக்கிக்கொண்டுள்ள கழுத்துப் போலிருக்கும் பகுதியே கருப்பையின் வாயிலாகும். இந்தக் கருப்பையின் வாயிலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/200&oldid=866018" இலிருந்து மீள்விக்கப்பட்டது