பக்கம்:மானிட உடல்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 மானிட உடல் மாதவிடாய் கின்றுபோனதும், அஃதாவது சூதக ஒய்வு ஏற்பட்டதும், ஹார்மோன்கள் குறைந்துவிடுகின்றன ; கரு அணுக்களும் முதிர்ச்சி அடைவதில்லை. அப்பொழுது எண்டோமெட்ரியமும் தசை மேலுறைகளும் சுருங்கி செய லற்றுப் போகின்றன. நாம் சாதாரணமாக வயது வந்தவ ரின் கருப்பையில் கானும் குறை, கருப்பையின் சுவரில் உருண்டையான தசைகளே யுண்டாக்கும் கட்டிகளாகும். இவற்றிற்கும் புற்றுநோய்க்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இவற்ருல் தொந்தரவ்ே இல்லை ; அவை மிகப் பெரி யனவாக ஆயின், அல்லது குருதியொழுக்கினை விளைவித்தால் தான் அவற்றை நீக்க வேண்டும். இந்தத் தசைக் கட்டிகளும் சூதக ஒய்வுடன் சுருங்கத் தொடங்கிவிடுகின்றன. யோனிக் குழல் இதுகாறும் கூறப்பெற்ற அமைப்புக்கள் யாவும் உள் ளடங்கிய பிறப்புறுப்புக்களாகும். யோனிக் குழலும் யோனி யும் வெளிப்புறத்திலுள்ள பிறப்புறுப்புக்களாகும். யோனிக் குழல் (புகைப்படம் கஎ-ஐப் பார்க்க ; படம் 50.) கிட்டத் தட்ட நான்கு அங்குல நீளமுள்ள வாய்க்கால்; அது தொடை களுக்கிடையே வெளியிலிருந்து மேல் நோக்கியும் முதுகை நோக்கியும் நீண்டு செல்லுகின்றது. வாயிலுள்ளதைப் போலவே அது பல எபிதீலியப் படலங்களால் போர்த்தப் பெற்றிருக்கின்றது. பல்வேறு :ெ11ஆ7 நிலைக்கேற்றவாறு எபிலி தீயத்தின் கனம் மாறுபடுகின்றது. கருப்பையின் வாயில் யோனிக் குழலின் முன் புறத் தின் நுனியில் துருத்திக்கொண்டிருக்கிறது ; அது தன்னிட முள்ள பொருள்களே வெளிப்புறமாகத் தள்ளவும் கூடும். யோனிக் குழலில் செலுத்தப் பெறும் விசைப்புழுக்களை உள்ளே ஏற்றுக்கொள்ளவும் கூடும். உடலில் மிக ஆழத்தி லிருப்பதால் கருக்குழலின் வாயில் காயம் ஏற்படாமல் பாதுகாக்கப் பெற்றிருக்கிறது ; ஆல்ை, யோனிக் குழலில் சுரக்கும் அமிலச் சாறுகள் அதனைத் தாக்கக் கூடும் ; அதன் விளைவாக, கருப்பையின் வாயிலில் சாதாரணமான அரிப்புக் கள் ஏற்படுதலும் கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/216&oldid=866051" இலிருந்து மீள்விக்கப்பட்டது