பக்கம்:மானிட உடல்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 மானிட உடல் வுற்ற முட்டை தாயின் கருப்பையிலுள்ள ஏராளமான குருதி யுடன் உறவுகொள்கிறது. இப்பொழுது கருப்பையின் உட் புறத் தசை டெஸிடுவா’ என்ற பெயரைப் பெறுகின்றது. ட்ரோபோபிளாஸ்டுகள் வேகமாக வளர்ந்து விரல்கள்போன்ற அதைப்புக்களை உண்டாக்கிக்கொள்ளுகின்றன ; இந்த அதைப்புக்கள் தாய்க் கருப்பையை அரித்துக்கொண்டு அதன் குருதியைப் பெறுகின்றன. கருவின் இந்த ஆரம்ப காலத்தில் 'குட ற்பிசிறுகள்’ எனப்படும் விால்போன்ற அதைப்புக்களின் குறுக்கே செல்லும் குருதியோட்டத்தில் உள்ள உணவுப் பொருள்களால் இளஞ்சூல் ஊட்டம் பெறுகின்றது. இந்தப் பிசிறுகள்தாம் வளாச்சிபெறும்இஞ்சின் முன்னுேடிக்ள் கரு வுற்ற மூன்று வாங்களுக்குப் பிறகு இப் பிசிறுகளிலும் குருதிக் குழல்கள் உண்டாகின்றன ; ஒரு மாதத்திற்குப் பிறகு இக் குழல்கள் ஒன்றுசேர்ந்து கொப்பூழ்க் கொடியின் பாய்குழலாகவும் வடிகுழலாகவும் மாறுகின்றன. கரு அணுவி லுள்ள உட்பகுதி மிக வேகமாக வளர்கின்றது ; நூருவது நாளில் கருவிலுள்ள குழந்தையும் நஞ்சு எனப்படும் வட்ட வடிவமுள்ள தட்டையான உறுப்பும் நன்முக வளர்ச்சி யடை கின்றன. இந்த நஞ்சுதான் தாய்க்கும் குழந்தைக்கும் கொப் பூழ்க் கொடியின் பாய்குழல், வடிகுழல்களின் மூலம் தொடர்பு ஏற்படுத்துகின்றது. (புகைப்படம் கஅ-ஐப் பார்க்க). கொப்பூழ்க் கொடியின் வடிகுழல் கருக் குழந்தையின் குருதியை நஞ்சுக்குக் கொண்டு வருகிறது ; அங்கு கருக் குழந்தையின் கழிவுப்பொருள்கள் நஞ்சுச்சவ்வின் வழியாகத் காயின் குருதியினுள் பாவிச் செல்லுகின்றன. பல்வேறு உணவுப் பொருள்கள், மின்னுற்பகு பொருள்கள், நீர், உப்புப் பொருள்கள் ஆகியவை நஞ்சுச் சவ்வின் வழியாக தாயின் குருதியிலிருந்து பாவிச் சென்று கொப்பூழ்க் கொடி யின் பாய்குழல் வழியாக கருக் குழந்தையை அடைகின்றன. நஞ்சு இத்தகைய போக்கு வாவுப் பணிகளைத் தவிர, எஸ்ட்ரோஜென்களையும் புரோஜெஸ்ட்சோனையும் உற்பத்தி செய்கின்றன ; இந்தப் பொருள்கள் கருப்பையின் உட்புறத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/222&oldid=866064" இலிருந்து மீள்விக்கப்பட்டது