பக்கம்:மானிட உடல்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்பம் 187 மாணுக்கர்கள் எப்பகுதி ஒரு குறிப்பிட்ட அமைப்பாக மாறக் கூடும் என்று தீர்மானித்திருக்கின்றனர். வளர்ச்சியுறும் விலங்குகளின் இளஞ்சூல்களே நுட்பமான சத்திர சிகிச்சை களேச் செய்து, அகல்ை உண்டாகும் மாறுபாட்டமைப்பைக் கவனித்து, இம் முடிவு தீர்மானிக்கப் பெற்றது. ஒரு குழந்தை ஆணு பெண்ணு என்பது தொடக்கத்தி லேயே தீர்மானிக்கப் பெறுகின்றது ; உண்மையில் கரு அணு கருவுற்றதும் அது முடிவு செய்யப்பெறுகின்றது ; உண்மை யான ஒரு மாற்றம் ஏற்படுவதற்குக் காரணம் ஒன்றும் இல்லை. வளர்ச்சியுறும் ஆண் விசையிலுள்ள ஆதி விாைப்புழுவில் இாண்டு விதமான இனக் குரோமோஸோம்கள் உள்ளன : அவற்றை எக்ஸ்-குரோமோஸோம் என்றும், ஒய்சோமோஸோம் என்றும் வழங்குவர். வளர்ச்சியுறும் SS இரண்டாகப் பிரியும்பொழுது, சில விாைப்புழுக் கள் எக்ஸ்-வகைக் குரோமோஸோம்களையும், சில ஒய்-வகைக் குரோமோஸோம்களையும் பெறுகின்றன. பெண் கரு அணு வில் எக்ஸ்-குரோமோஸோம் வகை மட்டிலும் உள்ளது. ஒரு முட்டையைக் கருவுறச் செய்யும் ஒரு குறிப்பிட்ட விாைப்புழு எக்ஸ்-குரோமோலோமைக் கொண்டிருந்தால் இரண்டு எக்ஸ்-குரோமோளோம்களின் சேர்க்கை ஒரு பெண் குழந்தை பிறக்கக் காரணமாகின்றது. ஒய்-குரோமோ ஸோமைக் கொண்டுள்ள விாைப்புழு எக்ஸ்-குரோமோ ஸோமைக் கொண்டுள்ள பெண் கருவுடன் சேர்ந்து எக்ஸ்ஒய் குரோமோஸோம்களின் சேர்க்கையால் ஆண் குழந்தை பிறக்கின்றது. ஆகவே, ஒரு காய்க்குப் பிறக்கும் குழந்தை ஆணு பெண்ணு என்று நிர்ணயிப்பதில் அவளுக்கு யாதொரு பங்கும் இல்லை என்பது தெளிவாகின்றது. குழந்தை ஆணு பெண்ணு என்பது பல்வேறு விாைப்புழுக்களில் பெண் கரு அணுவைத் துளைத்துச் செல்லும் ஒரு ஆண் விாைப்புழு வினேப் பொருத்திருக்கின்றது. கருப்பையில் வளர்ச்சியுறும் அமைப்பு இளஞ்சூல் ’ என்று வழங்கப் பெறுகின்றது. மூன்ருவது வாரத்திலிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/225&oldid=866070" இலிருந்து மீள்விக்கப்பட்டது