பக்கம்:மானிட உடல்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

遭88 மானிட உடல் எட்டாவது வாரம்வரை பல்வேறு உறுப்புகள் ஆரம்ப நிலையில் அமைகின்றன. (புகைப் படம் - க.அ-ஐப் பார்க்க.) எட்டாவது வாத்திலிருந்து இந்த அமைப்பு கருக் குழந்தை என்று வழங்கப் பெறுகிறது ; அது ஏனைய பாலிகளின் கருக் குழங் தையை யொத்திருக்கின்றது. நெற்றியும் வாலும் ஒன்றை யொன்று தொடும் அளவுக்கு அது முன் நோக்கி வளைந்திருக் கின்றது. மானிடக் கருவில் தலையும் மூளையும் தொடக் கத்தில் ஒவ்வாத அளவுக்குப் பெருத்தும் உறுப்புக்கள் குட்டையாகவும் இருக்கின்றன. நாளடைவில்தான் சரியான விகித அளவுகள் மெதுவாக ஏற்படுகின்றன ; புனிற்றிளங் குழவியும் அமைப்பில் மனிதனை யொத்திருக்கின்றது. " கருக் குழந்தை வாழ்வில் அமைப்பிலுள்ள சில வேறு பாடுகள் கருப்பை வாழ்வுக்கேற்றவாறு அனுசரித்துக்கொள் வதற்கு இன்றியமையாதவைக ளாகின்றன. எடுத்துக் காட் டாக, கருப்பிண்டம் சுவாசிக்க முடியாததால் குருதியின் பெரும் பகுதி அதன் துரையீரல்களினுள் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. குருதியில் பெரும் பகுதி இதயத்தின் வலப்புறத்திலிருந்து இடப்புறத்திற்கு அவற்றின் இடையே யுள்ள ஒரு சுவரிலுள்ள திறப்பின் வழியாக நுரையீரல் காடிக்கும் பெரு நாடிக்கும் இடையேயுள்ள இணைப்பின் மூலம் செலுத்தப் பெறுகின்றது. குழக்கையின் பிறப்பிற்குப் பிறகு குருதி நுரையீரல் வழியாக செல்ல வேண்டும்பொழுது இந்த இணைப்புகள் மூடப் பெறுதல் வேண்டும். பிறப்பிற்கு முன்னலுள்ள இத்தகைய இணைப்பு மறையா கிருப்பதால், குழந்தையின் குருதி சரியான அளவு உயிரியம் செலுத்தப் பெருது லேக் குழந்தை” என்ற பெயரினைப் பெறுகின்றது. இவ் வேலையில் அனுபவமிக்க மருத்துவர் அக்குறையை கிவர்த்தி செய்துவிடுவார். பெரும்பாலும் கருப்பையில் கருப்பிண்டம் தலைகீழாக வும், புயங்களே மடக்கிக்கொண்டும், முழங் கால்களே நீட்டிக் கொண்டும் பாதங்களைப் பின்னிக்கொண்டும் படுத்துக் கிடக் கின்றது (படம் - 57). எனினும், வேறு நிலைகளில் அது இருக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன. அது இருக்கும் நிலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/226&oldid=866072" இலிருந்து மீள்விக்கப்பட்டது