பக்கம்:மானிட உடல்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J. 90 மானிட உடல் குழந்தை தானுக நகர்வதற்கும் சிறு சிறு உதைகளைக் கருவ தற்கும் செளகர்யமாக உள்ளது ; தாய் ஐந்தாவது மாதத்திற் குப் பிறகு இத்தகைய உதைகளே அறிகின்ருள். கருக் குழந் தையைப் பிரசவத்திற்கேற்ற சரியான நிலையில் கிருப்பி யமைக்கவும் சாத்தியப்படக் கூடியதுதான்; ஆயினும், ஆசன உதயம் எனப்படும் பிரசவத்தில் குழந்தையின் ஆசனம் முதலில் உதயம் ஆலுைம், குழந்தை சுகமாகப் பிரசவம் ஆய்விடுகிறது. வளரும் கருக் குழந்தைக்கு வசதி பண்ணுவதற்கும் அதற்கு ஊட்டம் தருவதற்கும் தாயின் உடல் பல்வேறு விதங்களில் மாறிக்கொள்ள வேண்டும். கருப்பையின் சுவர் குறிப்பிடத்தக்கவாறு கனமாகவும் நீளமாகவும் ஆகிறது ; இது ஒரளவு ஹார்மோன்களின் பாதிப்பாலும் ஒரளவு கருக் குழந்தை அதன் தசையை நீளும்படி செய்வதாலும் நேரிடு கின்றது. இதல்ை ஒவ்வொரு கசை நாரும் கடினமாகவும் நீளமாகவும் மாறுகின்றது. கருவுற்ற தொடக்கத்தில் கருப்பை சிறுநீர்ப் பையை அமுக்குகிறது ; ஆல்ை, அது இடுப்பெலும்புக்கட்டினுள்ளிருந்து எழும்பியவுடன் அதிகமா கப் பெருக்கக் கூடிய வயிற்றறை கருப்பகால இறுதிவரை யிலும் பெரிதாக வளர்ச்சியுறும் கருக்குழந்தையை ஏற்றுக் கொண்டுவிடுகிறது. அதிகமாகப் பெருத்தால் ஏனைய உறுப் புக்கள் யாவும் மிகவும் நெருங்கி உகாவிதானத்தை அழுத்த அதனுல் நுரையீரல்கள் அழுத்தப் பெற, சுவாசிப்பதில் சங்கடம் ஏற்படுகிறது. கருப்பகால இறுதி நாட்களில், கருக் குழந்தையின் தலை இடுப்பெலும்புக் கட்டின் அடியில் இறங்கி விடுவதால் (புகைப்படம் க.அ-ஐப் பார்க்க.) சுவாசிப்பதில் செளகர்யம் ஏற்படுகின்றது ; ஆல்ை, சிறுநீர்ப் பை உடனே விரைவாக விரிய முடிகிறதில்லை. தாய் என்ருக உண்டு நல்ல முறையில் ஒய்வு எடுத்துக் கொண்டால், குழந்தையைக் கருப்பையில் வைத்துக்கொண் டிருப்பதால் அவளுக்கு யாதொரு தீங்கும் நேரிடுவதில்லை. அவள் சரியாக உண்ணுது ஒய்வும் எடுத்துக்கொள்ளாவிடில் அவளுக்கு குருதிச் சோகை ஏற்படலாம். மக்கள் நம்பிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/228&oldid=866076" இலிருந்து மீள்விக்கப்பட்டது