பக்கம்:மானிட உடல்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 மானிட உடல் அரியோலா அரியோலர் . - காப்பிகள் பால்வரு” துரம்பு படம் - 58 : கொங்கையின் வரைபடம். பால்சுரப்பியைக் காட்டுவது. கருப்பம் வளரத் தொடங்கினவுடன் கொங்கைகள் இன்னும் அதிகமாகப் பெருத்து, குழந்தைக்காகப் பால் சுரக்கும் ஒரே செயலை மேற்கொள்வதற்குத் தயாராக இருக் கின்றன. சிற்றறைகள்” எனப்படும் சுரப்பித் தொகுதிகள் தாம்புகளிலிருந்து முளைத்து அழுத்தமான சுரப்பி இழைய மாகத் திரள்கின்றன. அதிகமான குருதிக் குழல்கள் தோன்றி இழையப் பாய்மமும் அதிகமாகின்றது. கொங்கை கள் உறுதியாகவும் உருண்டை வடிவமாகவும் மாறுகின்றன. முலைக்காம்புகளும் கருகிறத்தைtஅடைகின்றன. இம் மாற்றங் களெல்லாம் குற்பைகளிலும் நஞ்சிலும் தோன்றும் ஹார் மோன்களின் செயல்கள் என்று சொல்லுகின்றனர். பிறப்பு சூல்கொண்டிருத்தல், அஃதாவது குழந்தை தாயின் உடலினுள் இருத்தல், ஏன் ஒரு முடிவுக்கு வருகிறது ? குழந்தை ஏன் பிறக்கிறது ? என்பதைப் பற்றி ஒருவரும்

  • Alveoli. t' விரும்பார் முளைக்கண் கரிந்து --சிந்தா.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/230&oldid=866082" இலிருந்து மீள்விக்கப்பட்டது