பக்கம்:மானிட உடல்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்பம் 193 சரியாக அறிந்திலர். சூற்பைகளில் சுரக்கும் ஹார்மோன்கள் கின்று போவதால் கருப்பையின் சுருக்கங்களின்மீதுள்ள கட்டுப்பாட்டு குறைந்து போகக் கூடும். நஞ்சில் காலப் போக்கால் நேரிடும் மாறுதல்கள் குழந்தைக்குக் கிடைக்கும் குருதியைக் குறைத்தல் கூடும். குழந்தையின் பருமன் கருப்பையின் விரிவை மேலெல்லை வரையிலும் கொண்டு போய் நிறுத்தி, அதிலிருந்து பலமான சுருக்கங்கள் தூண்டப் பெறுதல் கூடும். என்ருலும், எந்த ஒரு அம்சமும் பிரசவத்தை உண்டாக்குகிறது என்று சொல்ல இயலாது. காரணம், குழந்தையின் வளர்ச்சியில் அது எந்த நோத் திலும் நேரிடக் கூடும். ஏழாவது மாதத்திற்கு முன்பே பிறக்கும் குழந்தை உயிருடன் வாழ்தல் அரிது. எட்டாவது, ஒன்பதாவது மாதத்தில் பிறக்கும் குழந்தைக்கும் பிரத்தியேகமான பாது காப்பு அளிக்கப் பெறுதல் வேண்டும். அவை முழு வளர்ச் சியை எய்தாததால், அவை ஒரு சிறிய கிழவனைப் போல பெரிய தலையுடனும் திசையுடன் கூடிய (சுருங்கிய) சிவப்புக் தோலுடனும் காணப்படுகின்றன. பருவத்திற்கு முன்ன தாகப் பிறக்கும் குழந்தை, அதாவது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தையும் உயிருடன் வாழ்வதற்கு இன்குடி பேட்ட்ரைக் கொண்டு ஏற்பாடு செய்யலாம். குழந்தையின் தசைகள் மிகவும் பலமற்றவையாக இருப்பதாலும் அவற்றின் மறிவினை இடங்கள் ஒன்ருேடொன்று நன்முகக் தொடர்பு கொள்ளாதிருப்பதாலும், அதனே இன்குயூபேட்டரின் கட்டுப் டுள்ள சூழ்நிலையில் செயற்கை முறையில் பாலூட்டிக் காப் பாற்றலாம். பிரசவம் : முதல் நிலை வழக்கத்திற்கு மாருன நிலையில் கருப்பையில் ஏற்படும் பலமான சுருக்கங்களால் குழந்தைப் பிரசவம் தொடங்கு கிறது. வலி தோன்றுகின்றது ; அதனல் கருப்பையின் வாய் விரிகின்றது. இந்த முதல் கிலேயின் கால அளவு பல் வேறுவிதமாக நீடித்திருக்கும் , ஆல்ை, முதல் பிரசவத்தின் போது இக்கால அளவு அதிகமாகத்தான் இருக்கும். பனிக் மா. உ. 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/231&oldid=866084" இலிருந்து மீள்விக்கப்பட்டது