பக்கம்:மானிட உடல்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 மானிட உடல் குடம் எனப்படும் அமினியோடிக் உறை உடைகின்றது. ஒவ்வொரு தடவை வலி தோன்றும்போதும் பாய்மம் வெளி யேற்றப்படுகின்றது. இரண்டாம் நிலை பிரசவத்தின் இரண்டாம் நிலையில்தான் குழந்தை வெளிப் படுவது. குழந்தை வெளிப்படுவதற்கு வேண்டிய கால அள வும் கூட மாறுபடுகின்றது. இதற்கு வேண்டிய சராசரி கால அளவு ஒருமனியிலிருந்து இரண்டுமணிவரை நீடிக்கின்றது. பெரும்பாலும் தலைதான் முதன் முதலாக உதயம் ஆகிறது. அதனை அடுத்து புயங்கள், உடல், கால்கள் ஆகியவை ஒவ் வொரு பலமான சுருக்கத்தின்போதும் வரிசையாக நழுவி வெளிப்படுகின்றன. (புகைப்படம் - ககூ-ஐப் பார்க்க.) சிக்க லற்ற இயல்பான பிரசவத்தில் பிரசவ மருத்துவரின் பங்கெல் லாம் பிரசவத்திற்கு உதவி செய்வது, குழந்தையைத் தாங்கு வது, யோனியின் இரண்டு உதடுகளும் சேரும் இடம் (விடபம்) குழந்தையின் தலை வேகமாக வெளியேறும்போது கிழிந்து விடாது காப்பது ஆகிய செயல்களாகும். தாய் தன்வச மின்றியே குழந்கையை வெளிப்படுத்திவிடுகின்ருள். குழந்தையையும் நஞ்சையும் சேர்த்துக்கொண்டிருக்கும் கொப்பூழ்க் கொடி யோனிக் குழலின் வழியாக துருத்திக் கொண்டிருக்கும். அதை நான்கு அங்குல தாம்விட்டு சுத்த மான நூல் கயிற்ருல் கட்டி வெட்டிவிடுவார்கள். தலை வெளியானதும் புனிற்றிளங் குழந்தை தானுக சுவாசிக்கத் தொடங்குகின்றது. முழுப் பிரசவமும் ஆனவுடன் குழங் தையைத் கலை கீழாகப் பிடித்துக்கொண்டு வாயிலும் மூக்கிலு முள்ள சுரப்பு நீர்களே வடியச் செய்வார்கள். குழந்தை வீரிட்டு, ' குவா, குவா ’’ என்று போடும் கூச்சல் அதன் துரையீரல்களும் மார்பும் நன்முக விரியத் துணைசெய்கின்றது. சிறிது நேரம் அவ்வாறு கத்தட்டும் என்றே பிரசவ மருத்துவர் அதனைக் கவனியாது விட்டுவிடுவார். சாதாரணமாகக் குழந்தை மிகவும் விகாரமாகத்தான் காணப்படும். இடும்பெலும்புக் கட்டின் வழியாக வெளிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/232&oldid=866085" இலிருந்து மீள்விக்கப்பட்டது