பக்கம்:மானிட உடல்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருப்பம் 195 படுங்கால் தலை என்ருக உருவாக்கப்படுகின்றது. குழந்தை யின் மீது வெர்னிக்ஸ் ' எனப்படும் பாலேடு போன்ற வெண்மையான கொழுப்புப் பொருள் ஒட்டிக்கொண்டிருக் கும் ; முகத்தில் அது மிக அதிகமாக இருக்கும். தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் பூசி, சோப்பினுல் தேய்த்து, இளஞ்சூடான நீரில் குளிப்பாட்டித் துடைத்த பிறகு, முத லில் கொப்பூழ்க் கொடியைப் பாதுகாப்பாக மூடியும், கண் னில் சில்வர் நைட்ரேட் கரைசலை விட்டும் கொற்று ஏற்படாத வாறு பாதுகாப்பளிக்க வேண்டும். அதன் பிறகு குழந் தையை மெல்லிய வெண்மையான துணியால் போர்த்தித் தட் டையான உறுதியான படுக்கையின்மீது போட்டுவிடுவார்கள். மூன்ரும் நிலை பிரசவத்தின் மூன்ரும் நிலை தாமதமின்றி நடைபெறுதல் வேண்டும். இந்நிலையில் நஞ்சு தானுகக் கழன்று அது கருப் பையிலிருந்து வெளிப்படுகின்றது. வயிற்றறையில் ஏற்படும் பலமான சுருக்கங்களால் நஞ்சு யோனிக் குழலின் வழியாகத் தள்ளப்பெறும் ; அதை அகற்றுவதற்கு மருத்துவரும் துணை செய்யலாம். வெளிவந்த நஞ்சை நன்முகப் பரிசீலித்து முழு வதும் வெளியேறிவிட்டதா என்று கவனிக்க வேண்டும். ஏதாவது சிறிதளவு தங்கிவிட்டால் அது உதிரப் பெருக்கை உண்டாக்கும். கருப்பை மிகவும் தளர்ச்சிய்டைங்கிருந்தாலும் அதிகமான குருதிப்போக்கை உண்டாக்கும். நஞ்சு வெளிப் பட்டதை அடுத்து நன்ருகக் கவனித்து, தேவையானுல் கருப் பையின் மேற்புறமாக அமுக்கிப் பிடித்துக்கொண்டு, குருதி அதிகம் வெளிப்படாது பாதுகாக்க வேண்டும். குழந்தை பிரசவம் ஆனபிறகு ஆறு வார காலத்தில், கருப்பை படிப்படியாகச் சுருங்குகிறது ; ஆனல், கருப்பை கருவுறுவதற்கு முன்னுள்ளதைவிட சற்றுப் பெரிதாகத்தா னிருக்கும். யோனிக் குழல் வழியாக இாண்டு வாரத்திற்குக் குருதியொழுக்கு வந்துகொண்டேயிருக்கும். குழந்தைக்குத் தாய் பாலூட்டாவிட்டால், மாதவிடாய் வட்டமும் கருஅணு பக்குவமடைதலும் மிகவும் சீக்கிரத்திலேயே நடைபெறத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/233&oldid=866087" இலிருந்து மீள்விக்கப்பட்டது