பக்கம்:மானிட உடல்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 13 நரம்பு மண்டலம்தான் மனித உடலின் எல்லாவற்றிலும் முக்கியமான பகுதி என்று கருதலாம். அதன் மூலந்தான் மானிட உயிரி முழுத்தன்மையை எய்தி செயற்பட ஏதுவாக இருக்கின்றது. அதன் காரணமாகத்தான் உள்ளும் புறமும் தனது சூழ்நிலைக் கேற்றவாறு மானிட உடல் எதிர்த்து இயங்க முடிகின்றது. நரம்பு மண்டலம், ஒரு முறையில் நோக்கினல், ஒரு செய்தியறித் துறை போன்றது. தோல், கண்கள், காதுகள், நாக்கு போன்ற வெளியுலகச் சூழ்நிலை யுடன் தொடர்புகொள்ளும் உறுப்புக்களுடனும் மூ எனப்படும் நடு சொடுக்கிப் பலகையுடனும் தொடர்புள்ள ஒரு செய்தியறி மண்டலம் ஆகும் அது. மூளேதான் ஆணைகள் பிறக்கும் இடம். அவற்றை யொட்டி பல்வேறு சந்தர்ப்பங்களுக் கேற்றவாறு சரியான முறையில் உடல் இயங்க வேண்டும். இந்த ஆணைகள் செய்தியறி மண்டலத்தின் பல்வேறு பகுதிகளின் மூலம் பல உறுப்புக்களுக்கும் அனுப் பப் பெறுகின்றன; உறுப்புக்கள் அவற்றிற்கேற்ற செயல்களை கிறைவேற்றுகின்றன. சுவாசித்தல், குருதியோட்டம், செரிக் தல், கழிவுப் பொருள்களே அகற்றுதல் போன்ற உடலின் உட்புறச் சூழ்நிலைகள் பற்றிய செயல்களனைத்தும் நரம்புமண்ட லத்தின் பகுதிகளால் ஒழுங்குபடுத்தப் பெறுகின்றன. இவை யாவும் மறிவினேநிலை எனப்படும் சிறிதளவு வேறுபட்ட

  • Central Switch-board
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/235&oldid=866091" இலிருந்து மீள்விக்கப்பட்டது