பக்கம்:மானிட உடல்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 மானிட உடல் தகைய சோடி காம்புகள் தொடங்கும் முதுகு நடுகாம்பின் ஒவ்வொரு பகுதியும் முதுகுத்தண்டின் பகுதி என்று வழங் கப்பெறுகின்றது. இவ்வாறு பகுதிகளாகப் பிரிக்கப் பெற் றுள்ள ஏற்பாடு தசைகள், தோல் ஆகியவற்றின் ஏற்பாடு களே யொட்டி இருக்கின்றது. இது தண்டு வடத்தின் மருத் துவச் சோதனையில் மிக முக்கியமாகப் பயன்படுகிறது. மேற் பாப்பு நரம்பு மண்டலத்தைப்பற்றி ஆராயும்பொழுது முதுகு நரம்பு வேர்கள் என்பதைப்பற்றிக் கூறுவோம். முதுகு நடுநாம்பு இரண்டு முக்கிய செயல்களே ஆற்றுகின் றது. முதலாவதாக, அது பிரதம உடலாக இருந்துகொண்டு மூளைக்கு உட் துடிப்புக்களே அனுப்பவும், மூளையி லிருந்து வரும் துடிப்புக்களைப் பாப்பவும் உதவுகின்றன. உண்மையில் அதுதான் புற உறுப்புக்கள், அக உறுப்புக்கள், மூளை ஆகியவற்றின் இடையிலுள்ள வழிகளில் முக்கிய வழி நிலையமாக அமைந்துள்ளது. தோலிலிருந்து வரும் புலனுணர் உட் துடிப்புக்கள் அவற்றினுடைய புலனுணர் பசப்புக் களின் வழியாகச் செல்லுகின்றன ; மூளையிலிருந்து கண்டின் செய்கைப் பாப்புக்களின் மூலம் உள்துடிப்புக்கள் செல்லுகின் றன. இத்துடிப்புக்கள் சாம்பல்கிறப்பொருளின் முன்பகுதியி லுள்ள நாப்பங்களைச் செயற்படுத்துகின்றன. இப்பொழுது அவை நடுநரம்பின் வேர்கள் மூலமாகவும் அதன் பிறகு செய்கை நரம்புகள் மூலமாகவும் செய்கைத் ஆப்பு:ஆழ் புற உறுப்புக்களுக்கு அனுப்புகின்றன. தண்டுவடத்தின் இரண்டாவது முக்கிய செயல் மடக்குச் செயலைப்பற்றியது ; மடக்குச் செயல் தானங்களில் கண்டுவடத்தான் மிகவும் முக்கியமானது. உங்களுடைய கை சூடான பொருளேத் தொடும்பொழுது அல்லது உங்களுடைய மருத்துவர் உங்களை முழங்கால் சில்லிற்குக் கீழே தட்டும்பொழுது, முள்ளந் தண்டை அடையும் புலனுணர் துடிப்பு உடனே அதே கண் டின் பகுதியிலுள்ள செய்கை நாப்பங்களின் ஒரு தொகுதியை இயக்கிவிடுகின்றது ; உங்கள் கை இழுத்துக்கொள்ளப் பெறு கின்றது ; உங்கள் காலும் அசைகின்றது (படம் - 63). இத்தகைய செய்கை மூளையின் மேலிடங்களுக்குத் தெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/248&oldid=866118" இலிருந்து மீள்விக்கப்பட்டது