பக்கம்:மானிட உடல்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியோட்ட மண்டலம் 17 குருதியை பெருங் குருதியோட்டத்தின் மூலம் உடலெங்கும் வினியோகம் செய்கிறது. அடிப்படையில் இதயம் குடுக்கை நிலையிலுள்ள ஒரு சதைப்பிண்டம் , அதில் நான்கு அறைகள் உள்ளன. வலப் புற இதயத்தில் ஊற்றறை என்ற ஒரு மேலறையும் ஏற் றறை என்ற ஒரு கீழறையும் உள்ளன. இந்த இரண்டு அறைகளுக்கிடையே ஒரு பக்கம் திறக்கக் கூடிய ஒரு வால்வு உண்டு ; அது மூவிதழ் வால்வு என்று வழங்கப் பெறும். இடப்புற இதயத்தில் இம் மர்கிரியே இரண்டு அறைகள் உள்ளன ; ஆனுல், அதில் அறைகளைப் பிரிக்கும் வால்வு மிட் ால வால்வு என்று வழங்கப் பெறுகின்றது. இதயம் அடித்துக்கொள்கிறது என்பதை நாம் அறிவோம். இவ்வாறு அடித்துக்கொள்வது - ஒய்வின்றி ஒருவித சங்க முறையில் சுருங்கி விரிதல் - இதயத் தசை யின் ஒரு நிகரற்ற தன்மையாகும். அடியிற் கண்டவாறு அதற்கு ஒரளவு விளக்கம் தரலாம். இதயத்தில் தெளி வான வேற்றுமையையுடைய இரண்டு வித உயிரணுக்கள் உள்ளன. பெரும்பான்மையான உயிரணுக்கள் நம்முடைய எலும்புடன் இணைந்திருக்கும் தசைகளிலுள்ள உயிரணுக் களப் போன்றவை. அவற்றில் ஒரே ஒரு வேற்றுமை உண்டு , அஃதாவது, இதயத்திலுள்ள தசை கார்கள், அல்லது உயிரணுக்கள் ஒன்ருேடொன்று தொடர்புள்ளவை. இதயத்தின் மற்ருெரு வகை உயிரணுக்கள் தனித்த இடங் களில் காணப்பெறுகின்றன. அவை நாதனமான அமைப் புக்கள் ; நரம்புத் தூண்டல்களேச் செலுத்துவதற்கு அவை மிகவும் முக்கியமானவை. இவற்றை யெல்லாம் ஒன்றுசேர்த்து விளக்கிய மேதையின் பெயரால் இவை பர்க்கிஞ்சி மண்ட லம்’ என்று வழங்கப்பெறுகின்றது. இதயத்தில் தனிப்பட்ட இடங்களில் உள்ள கசையில் சைனே-அட்ரியல் முண்டு என்பது ஒன்று அங்குதான் துண்டுதல் உணர்வை உண்டாக்கக் கூடிய இதயக் சுருக்

  • Purkun je system 2 . سr. eم
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/25&oldid=866122" இலிருந்து மீள்விக்கப்பட்டது