பக்கம்:மானிட உடல்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 மானிட உடல் வெப்பம், தொடுதல் போன்ற பொறியுணர்ச்சிகளை அனுப்பு கின்றன. இந்தப் பொறியுணர்ச்சிகள் பல்வேறு வழிகள் மூலம் சென்ருலும், அவையெல்லாம் மூளையிலுள்ள தாலமஸ் எனப் படும் ஒரு பகுதியில் முடிவடைகின்றன. தாலமஸிலிருந்து தான் பெருமூளையின் புறணிக்கு உள் துடிப்புகள் செல்லு ன்றன ; அப்புறணியில்தான் அவை இன்னவை என மதிப் பிடப்பெற்று நாம் அவற்றின் தன்மையை அறிந்துகொள்ளு கின்ருேம். சுருங்கக் கூறின், நம்முடைய பெரு மூளையின் புறணியினுல்தான் பொறியுணர்ச்சிகளை உணர்கின்ருேம் ; சுவைக்கின்ருேம். முதுகு நடு நரம்பிற்கு மேற்புறமாக இருப்பது முகுளம் எனப்படும் நடு முடிச்சு. (புகைப்படம் உஉ ஐப் பார்க்க : படம் 66.) நடு முடிச்சு மூளையின் ஒரு பகுதியே ; கூர்தல் அறதத்துவப்படி கூறினுல் அதுதான் மிகப் பழமையானது. அங்குதான் ஆட்டோனுேமிக் காம்பு மண்டலத்தில் இரண்டு முக்கிய இடங்கள் அமைந்துள்ளன. ஒன்று சுவாசிக்கும் தானம் , அது சுவாசித்தலைப் பொறுத்தது ; மற்ருென்று, இதயத்துடிப்பையும் குருதிக்குழல் மண்டலம் முழுவதையும் ஒழுங்குபடுத்தும் கார்டியோ - னேஸ்குலர் தானம். இந்த இரண்டு இடங்களும் மண்டை காம்புகளின் ஒன்ருகிய சஞ் சாரி காம்பினுல் (பக்தாவது நாம்பு) செயலாற்றுகின்றன ; இந்தச் சஞ்சாரி நாம்பு ஆட்டோனுேமிக் காம்பு மண்டலத் தைச் சேர்ந்ததாகும், வேறு பல மண்டை காம்புகளும் முகுளத்திலிருந்து தொடங்குகின்றன. மண்டை நரம்புகளைப் பற்றிப் பின்னல் விளக்கப்பெறும். முகுளத்திற்கு அப்பால் இருப்பது பாலம்’ என்ற பகுதி. (புகைப்படம் உo - ஐப் பார்க்க படம் 66.) அகன் பெயர் குறிப்பிடுவதுபோலவே, அது ஒரு பாலமே. அதில் பேரெண்ணிக்கையில் அடங்கியுள்ள பாப்புக்கள் முகுளத் துடனும் நடுகாம்புடனும் இணைந்திருப்பதுடன் சிறுமூளை

  • Pons.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/250&oldid=866124" இலிருந்து மீள்விக்கப்பட்டது