பக்கம்:மானிட உடல்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 மானிட உடல் 3. சிறுமூளையை ஆங்கிலத் தில் * செரியெல்லம் என்று வழங்குவர். செரிபெல்லம் என்ற சொலலே அப்படியே மொழி பெயர்த்தால், சிறு மூளை என்று பொருள்படும். சிறு மூளை முதுகுப் புறமாகவும் பாலத்திற்கும் முகுளத்திற்கும் உள்ள இடைவெளியிலும் அமைந்திருக்கின்றது. சிறுமூளை அசைவுகளே யெல்லாம் தொடர்புபடுத்தும் சிறந்த இடமாக இருப்பதால், அது நேர்த்தியான அசைவுகள் இலகுவாகச் செயற்படுவதற்குத் துணைசெய்கின்றது. சிறு மூளையில்லா விடில் நம் இயக்கங்கள் அவலட்சணமாகவும் இடறிவிழக் கூடியனவாகவும் இருக்கும். அன்றியும், சிறுமூளை சமநிலை யுடனும் முக்கியமான தொடர்பு கொண்டுள்ளது. அது முகுளத்தில் அமைந்துள்ள கியூக்ளியை எனப்படும் நாப் பக் தொகுதிகளுடன் நெருங்கி இணைந்திருக்கின்றது. அத் தொகுதிகள் கர்தின் தேகளி இயந்திர அமைப்பின் மூலம் பெறும் உள்துடிப்புகளைக் கொண்டு நாம் நிற்கிருேமோ, திரும்புகின்ருேமோ, குனிகின்ருேமோ என்பன போன்ற வற்றை நமக்கு உணர்த்தத் துணைசெய்கின்றன. சிறுமூளை பெருமூளையினின்றும் தண்டுவடத்தினின்றும் பல $பாப்புக் களே ஏற்றுக்கொள்வதுடன் பரப்புக்களே நடு நாம்பு மண் டலம் முழுவதற்கும் அனுப்புகின்றது. அது தன்னிச்சையாக நடைபெறும் இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் சிறந்ததோர் அமைப்பாகும். பாலத்தின் மேற்புறமாக நடுமூளை என வழங்கும் மூளை யின் ஒரு பகுதியுள்ளது. அவ்விடத்தில்தான் அதிகமான மண்டை நாம்புகள், சிறப்பாக கண் நகர்ச்சியுடன் தொடர்பு கொண்டிருப்பவை, தொடங்குகின்றன. நடு மூளைக்கு அப்பால் நியூகிளியையின் ஒரு பெருந் தொகுதியுள்ளது; அதுவும் மூளையின் ஒரு பகுதியே. அதில் இந்த அமைப்புக்கள் யாவும் அடங்கியுள்ளன ; கன்னிச்சை யாக கடக்கக்கூடிய இயக்கத்துடன் தொடர்புகொண்டுள்ளன

  • Cerebellum. fequilibrium. imechanism. Štracts.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/252&oldid=866128" இலிருந்து மீள்விக்கப்பட்டது