பக்கம்:மானிட உடல்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மானிட உடல் கம் தொடங்குகின்றது. இந்தத் தாண்டுதலில் ஒரு குறிப் பிட்ட அளவு மின்ற்ைறல் உண்டு; அந்த ஆற்றலை அளக்கவும் கூடும். சைனே-அட்ரியல் முண்டிலிருந்துதான் இந்தத் துாண்டுதல் உணர்ச்சி இடப்புற, வலப்புற ஊற்றறைகளில் பாவுகின்றது. ஊற்றறைகளில் இத் தாண்டுதலைப் பிரத்தியேக மாகக் கொண்டுசெலுத்தவல்ல இழையம் இல்லை ; ஆனல், ஒன்ருேடொன்று தொடர்புகொண்டுள்ள தசை நார்கள் அதனை ஒன்றிலிருந்து பிறிதொன்றற்கு அஞ்சல் செய்கின் றது. ஊற்றறைகள் ஏற்றறைகளைச் சந்திக்கும் இடத்தில் பிரத்தியேகமான நார்களைக் கொண்ட தொகுதி அல்லது முண்டு ஒன்று காணப்படுகிறது ; அது அட்ரியோவெண்ட்ரிகுலர் முண்டு என்று வழங்கப் பெறுகின்றது. தாண்டுதல் உணர்ச்சி ஊற்றறைகளைக் கடந்து செல்லுங்கால் இந்த முண்டு அதனை வாங்குகிறது ; சிறிது நோம் தாம தித்து, அதனைப் பர்க்கிஞ்சி மண்டலத்தின் பெரும் பகுதிக்கு அனுப்புகின்றது. இந்தப் பெரும் பகுதியை ஹிஸ் கற்றை என்று வழங்குவர் ; அது இடப்புற, வலப்புற ஏற்றறைகளின் நடுப் பகுதியில் அமைந்துள்ளது ; அதிலிருந்து பல கிளைகள் பிரிந்து ஏற்றறைகள் இரண்டிலும் பாவுகின்றன. இந்தக் கிளைகளின் மூலம் ஏற்றறைகள் ஒரே சமயத்தில் அந்தத்துரண் டுதல் உணர்ச்சியைப் பெறுகின்றன. ஊற்றறைகளிலுள்ள தசைகளிலுள்ளதுபோலவே, இாண்டு ஏற்றறைகளிலும் அந்தத் தூண்டுதல் உணர்ச்சி விரைவாகக் கொண்டுசெலுத் தப்பெறுகின்றது. இதயம் முழுவதும் பாவும் இந்தத் தாண்டுதல் உணர்ச் சியை மின்சாாகார்டியோகிராம் என்ற கருவியால் பதிவு செய்யக் கூடும். அந்தத் தாண்டுதல் உணர்ச்சி சைனே-அட் ரியல் முண்டிலிருந்து ஏற்றறைப் பாப்பு முழுவதும் கடந்து செல்வதற்கு ஒரு விடிையில் ஒரு சிறு பகுதி காலம்தான் ஆகிறது. அந்தத் தாண்டுதல் உணர்ச்சி இதயத்தின் இரு பகுதிகளிலும் பரவியபிறகு ஊற்றறை ஏற்றறைகளின் தசைச் சுருக்கம் தொடர்ந்து நடைபெறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/26&oldid=866144" இலிருந்து மீள்விக்கப்பட்டது