பக்கம்:மானிட உடல்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 மானிட உடல் பகுதி உடனுக்குடன் அசையக் கூடிய இமை எனப்படும் திசையால் நன்கு மூடப்பெற்றுள்ளது. அது இச்சாச் செயலின் ஆட்சியிலிருந்தாலும், ஏதாவது தீங்கு நேரிடுவ தாகத் தெரிந்தால், அது மடக்குச் செயலால் மூடிக்கொள்ளும். கண்ணிமை மயிர்கள் கண்ணினுள் தீங்கு பயக்கும் துணுக்கு கள் விழாமல் பாதுகாப்பதற்காக அமைந்துள்ள இன்னுெரு அமைப்பாகும். நீர்வாழ் பிராணிகளிடமிருந்து கண் நீரில் - (காற்றில் அன்று) - செயற்படுவதற்காகவே அமைந்துள்ளது என்ற உண்மையைக் கண்டோம் ; அதை இப்பொழுது நினைவுபடுத் திக்கொள்ள வேண்டும். அவ்வாறே மனிதனிடமும் நடை பெறுகின்றது. கண்ணிர்ச்சுரப்பிகளில் ஊறும் உப்புத்தன்மை யுள்ள பாய்மம் சதா வடிந்து கிறந்த நிலையிலுள்ள கண்ணக் குளிப்பாட்டிக்கொண்டே யிருக்கிறது ; அது கண்ணிர்த் தாம்பின் வழியாக மூக்கினுள் வடிகின்றது (படம் - 68). படம் 68. கண்ணிர்ச் சுரப்பியும் கண்ணின் தாம்புகளும். . கண்ணிர்ச் சுரப்பி. மேல் இமை. so கீழ் இமை. கண்ணிர்த் தூம்புகள். . கண்ணிர்ப் பை. மூக்குத் தாம்பு. இந்தப் பாய்மம் அதிகமாக உண்டாகி, கீழ் மூடி கிாம்பி வெளி வருங்கால் அதனேக் கண்ணிர் என்று வழங்குகின்ருேம். உப்பு (சோடியம் குளோரைடு), சிறிது சளி, முட்டைச்சத்து (ஆல்ப்யூமென்) ஆகியவற்றைத் தவிர, கண்ணிலுள்ள பாய் மத்தில் லே சோ லைம்’ என்ற நுண் கிருமிகளை அழிக்கும் பொருளும் சேர்ந்துள்ளது. நுண்ணிய கிருமிகளால் நேரிடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/266&oldid=866157" இலிருந்து மீள்விக்கப்பட்டது