பக்கம்:மானிட உடல்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 229 தொற்று நோய்களைக் தடுப்பதற்கு இது சிறந்த கிருமி நாசினி யாக அமைந்திருக்கின்றது. முன்னரே கூறியுள்ளபடி, சமநிலையிலுள்ள மூன்ருவது, நான்காவது, ஆருவது மண்டை நாம்புகள் வியாபிக்கப் பெற் றிருக்கும் ஆறு சமநிலையிலுள்ள கண் தசைகளில்ை, கண் சுழலக் கூடியதாக வுள்ளது. இரண்டு விதமாகப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காகவே இரண்டு கண்களும் முழுவதும் ஒக்தே இயங்குமாறு அமைந்திருக்கின்றது. ஒர் நுண்ணிய புள்ளி யின்மீது இாண்டு கண்களையும் குவியச் செலுத்துவதில் துணை செய்வதற்குக் கண் தசைகள் ஒருங்கிணைந்து இயங்கு வது உயர்ந்த முறையில் வளர்ச்சி பெற்றுள்ளது. கண்கள் எப்பொழுதாவது அசையாகிருத்தல் அரிது. நம் கண்கள் கவனிக்கப் பெற்ருல், நாம் போலியாகத் துள்ங்கு வதில் வெற்றி யடைவதில்லை. காரணம், தாக்கத்திலிருப்பதை விட, அவற்றைத் தொடர்ந்து அசையாதிருப்பதைத் தவிர்த்தல் கவும் கடினமானது. கண் ஒரு கோளமான அமைப்பு ; அதன் பாப்பின் ஒரு பகுதிதான் வெளியில் தெரிகிறது. அது மிக உயர்ந்த சிக்க லான ஒளிக் கருவியாகும்; அதையொட்டித்தான் மிக எளிதான முறையில் புகைப்படப் பெட்டி அமைக்கப் பெற்றுள்ளது (படம் - 69). கண்ணின் உட்பகுதியை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முன்புற முள்ள சிறு பிரிவில் இலேசான, நீர் போன்ற தெளிவான பாய்மம்-முன் கண்ணிர்-உள்ளது; பின் புறமுள்ள பெரும் பகுதியில் கூழ்போன்ற பொருள் (பின் கண்ணிர்) உள்ளது. இந்தப் பாய்மங்கள் மெதுவாகச் சுற்றிக் கொண்டுள்ளன ; ஒரு குறிப்பிட்ட அளவு அவை குருதி வட்டத்துடன் பரிவர்த்தனே செய்துகொண்டு மிருக்கின்றன. எனினும், குருதி ஒட்டத்திற்கும் இவற்றிற்கும் ஒரு எடுப் பான வேற்றுமை என்ன வென்ருல், கண்ணிலுள்ள பாய்மத் தில் நச்சு உயிர்கள் இருப்பதில்லை என்பது. உயிரியல் ஆய் வாளர்கள் இப்பண்பை மேற்கொண்டு வேறு இனங்களின்

  • Anti-bodies.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/267&oldid=866159" இலிருந்து மீள்விக்கப்பட்டது