பக்கம்:மானிட உடல்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 மானிட உடல் குழம்பி மந்தநிலையை அடைந்த விழி வெண்படலத்திற்குப் பதிலாக பொருத்திவிட முடிகின்றது. இன்று இத்தகைய சத்தி சிகிச்சை அதிக அளவில் நடைபெறுகின்றது; கெட் டுப்போன விழி வெண்படலத்தைப் பெற்றுள்ளவர்கள் நல்ல பார்வையைக் கிரும்பப் பெறுகின்றனர். விழிவெண்படலத்திற்குச்சிறிது தாரத்திற்குப்பின்னல், அதிலிருந்து முன் கண்ணிாால் பிரிக்கப் பெற்று, வில்லை (லென்ஸ்) அமைந்திருக்கிறது ; அது விழித் திசை எனப் படும் வண்ண விதானத்தினுல் சிறிதளவு மூடப்பெற்றிருக் கின்றது (படம் - 69). வில்லையின் செயலும் விதானத்தின் செயலும் சிறிய நுண்ணிய பொருள்களைப் பார்ப்பதற் கேற்ற வாறும் தாக்கிலும் பக்கத்திலுமுள்ள பொருள்களின் மேல் பார்வையைச் செலுத்துவதற் கேற்றவாறும் தொடர்புடன் அமைந்துள்ளன. வில்லை இரு புறமும் குவிந்து வட்டமாக உள்ளது. அஃ தாவது, நடுவில் பருத்தும் விளிம்புகளில் மெல்லிய ஏடுபோல் வளைந்தும் அமைந்திருக்கின்றது. இரு புறம் குவிந்த ஒரு கண்ணுடி வில்லையைப் போலவே இதுவும் இணையாகவுள்ள ஒளிக் கதிர்களே ஏற்று அவற்றைக் குவியப் புள்ளியில் குவியு மாறு செய்கின்றது; கண்ணில் அது பின்புறத்தில் விழுமாறும் செய்கின்றது ; அங்குதான் பார்வைப் பதிவுகள் ஏற்றுக் கொள்ளப் பெறுகின்றன. (படம் - 70.) வில்லை பந்தகங் களால் தொங்கவிடப் பெற்றிருக்கின்றது ; அப் பந்தகங்கள் பக்கவாட்டிலுள்ள மெல்லிய தசைகளின் செயலால் விசைத்து கிற்கவும் தளர்ந்து கிற்கவும் கூடும். இந்தத் தசைகள் சுருங்கு வதற் கேற்றவாறும் தளர்ந்து கிற்பதற் கேற்றவாறும் வில்லை யின் வடிவம் மாறக் கூடும் ; ஆகவே, அது ஒளிக் கதிர்களின் விலக்க அளவினை மாற்றக் கூடும். விழி வெண்படலத்தைப் போலவே வில்லையும் குருதி யற்ற, ஒளிபுகும், நிறமற்ற இழையத்தாலானது. கண் படலம் எனப்படும் ஒரு மேகம்போன்ற மாற்றம் வில்லையில் தோன்றிக் கண் பார்வையைக் கணிசமான அளவுக்கு மங்கச் செய்யக் கூடும். இங்கிலை மற்றவர்களைக் காட்டிலும் முதியவர்களிடமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/270&oldid=866167" இலிருந்து மீள்விக்கப்பட்டது