பக்கம்:மானிட உடல்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 233 அடிக்கடி ஏற்படுகின்றது. ஆனால், ஒரு வில்லையை அகற்ற முடியும் ; கிட்டப் பார்வைக்குரிய சுண்ணுடிகள் அந்த இழப் பைத் தவிர்க்கவும் முடியும். ஒளி ஒரு துவாரத்தின் வழியாகப் புகுந்து சென்று வில்லையை அடைகின்றது. இங்கத் துவாசத்தின் அளவு கரு விழியில்ை கட்டுப்படுத்தப் பெறுகின்றது. இது ஒரு கிற மேற்றப்பட்டுள்ள வளேயம் ; பிறருடைய கண்களில் இதனை உடனே காணலாம். கண் மணி என்பது ஒரு துவாாம்; அது கரு விழியின் நடுவில் கரும்புள்ளிபோல் காணப்படுகின்றது. அதன் அளவு மடக்குச் செயலால் மாற்றப்படுகின்றது ; ஒளியின் அளவிற் கேற்றவாறும், பக்கத்திலுள்ள பொருள் களுக் கேற்றவாறும் தாக்கிலுள்ள பொருள்களுக் கேற்ற வாறும் அனுசரித்து மாறுகின்றது. அருகிலுள்ள பொருள்களைக் குவிய நிலைக்குக் கொணர்ந்து தெளிவாக்குவதற்காகக் கருவிழியும் வில்லையும் சேர்ந்தாற் போல் மாறுகின்றன. வில்லை உருண்டையாகி, மேலும் குவிநிலையை அடைகின்றது ; இது தசைகளின் தளர்ச்சியால் ஏற்படுகின்றது. கருவிழியின் சுருக்குத் தசை சுருங்கித் தெளிவான பார்வையை அனுசரித்துத் தேவைக் கேற்றவாறு தவாரத்தை, மூடிக்கொள்ளுகின்றது. இந்த மாறுதல்கள் யாவும் மடக்குச் செயலால் நிகழ்கின்றன. வயது ஆக ஆக, பக்கப் பார்வைக்கேற்றவாறு நம் கண் அனுசரித்துக்கொள்ள முடிகிறதில்லை ; சாதாரணமாகப் படிப்பதற்கும் கண்ணுடி தேவையாகிறது. விஷ்க கிரையில் (கட்புலப்படாமில்) அஃதாவது, கண் அருண்டையின் உட்புறமாகவுள்ள அணேச்சவ்வில், பார்வைப் புலனுணர் உறுப்புக்களின் முடிவுப் பகுதிகள் உள்ளன. ஒரு காமிரா எனப்படும் நிழற்பொறியில் புகைப்பட பிலிம் இந்த நிலையைப் பெற்றிருக்கின்றது. ஆனல், விழித் திரையில் மாற்றத்தால் உண்டாகும் விம்பம் உடனே தலைகீழாகப் புரட்டப் பெறுகின்றது; அதே உயிரணுக்கள் விரைவில் புதிய விம்பங்களே உண்டாக்குகின்றன. ஒருவர் ஒரு பகுதி பிரகாசமான ஒளியிலுள்ள காட்சி யொன்றில் தன் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/271&oldid=866169" இலிருந்து மீள்விக்கப்பட்டது