பக்கம்:மானிட உடல்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23& மானிட உடல் கேள்வி பார்வையைப் போலவே கேள்வியும் தொலைவிலுள்ள புலனுணர் உட் துடிப்புக்களே ஏற்பதால் நேரிடுகின்றது. பார்வையைப்போல கேள்வி நாம் வாழ்வதற்கு அவ்வளவு அதி முக்கியமானதாக இராவிடினும், கேள்வி புரிந்துகொள் வதற்கும் பாதுகாப்பிற்கும் ஒரு முக்கிய சாதனமாக அமைந் திருக்கின்றது. காது மந்தமாக உள்ளவர்கள், தம்முடைய விழிப்புடனிருக்கும் எந்திர கிலே குறையுள்ளதாக இருப் பதால், பாதுகாப்பு நாயை வைத்திருக்கின்றனர். கேள்விப் பொறி ஏற்பாட்டில் (படம்-72.) புறச் செவி இடைச் செவி, உட்செவி என்ற மூன்று பகுதிகள் உள்ளன. புறச் செவி காற்றலைகளே ஏற்கின்றன. காற்றினுல் நிரப்பப் பெற்றுள்ள இடைச் செவி அலைகளைக் கடத்துகின்றன; பாய் மத்தால் நிரப்பப்பெற்ற உட் செவியில் கேள்விப் புலனின் இறுதி உறுப்புக்களாகிய புகுவாயில்கள் உள்ளன. இவற்றி லிருந்து கேள்வி காம்பும் அதன் கிளேகளும் மூளையிலுள்ள கேள்வித் தானங்களைச் சேர்க்கின்றன. ஊற்றறை அல்லது புறச் செவி (காம் கானும் காதின் பகுதி) கேட்பதற்கு மிகவும் முக்கிய மன்று. அஃதின்றியே நாம் கேட்கலாம் ; குருக்தெலும்பாலாகிய அவ்வமைப்புக்குப் பதிலாக குழி வடிவாகச் செய்த நம் கையையே பயன்படுத்த லாம். அதன் கால்வாய் தோலிலிருந்து சுரக்கும் எண்ணெய் போன்ற ஒருவித சுரப்பு நீரால் வழுக்கிடப் பெற்றிருக் கின்றது ; இது உறையும்பொழுது மெழுகுபோன்ற கெட்டிப் பொருளாகின்றது ; காகில் அப்பொருள் அதிகமாகத் திாண் டால் கேட்பதற்குக் தடையாகவும் இருக்கும். கால்வாயின் இறுதியில் கிட்டத்தட்ட ஒரு புனல்போன்ற ஏடு ஒன்று அமைந்திருக்கின்றது. அதுதான் செவிப்பறை எனப்படுவது ; அது காதினே நன்முக அடைத்துக்கொண் டிருக்கும். இந்தச்சவ்வில் தாக்கும் காற்றலைகள் அதிர்ச்சிகளை உண்டாக்குகின்றன ; இவற்றை மூளை, ஒலி என்று இனம் அறிந்துகொள்ளுகிறது. அடிக்கடி நேரிடும் தொற்றினல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/276&oldid=866180" இலிருந்து மீள்விக்கப்பட்டது