பக்கம்:மானிட உடல்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 மானிட உடல் லாம். சில அதிர்ச்சி மட்டிலும் காற்றின் வழியாக அனுப்பப் List-off LD. இடைச் செவியிலுள்ள காற்று சதா உறிஞ்சப்பட்டுக் கொண்டே யிருக்கின்றது . ஆல்ை, இந்த அறை முன் தொண்டையுடன் நடுச்செவிக் குழலால் இணைக்கப் பெற்றுள் ளது. நாம் விழுங்கும்பொழுது அல்லது இருமும்பொழுது அல்லது கொட்டாவிவிடும்பொழுது காற்றை இந்தக் குழ லுக்குள் பலமாகச் செலுத்திக் காதில் காற்றை நிறைவிக் கிருேம் ; இதனுல் செவிப்பறையின் இரு புறமும் காற்றின் அமுக்கம் சமப்படுகின்றது. சில சமயம் நாம் ஜல தோஷத் தால் பிடிக்கப்பட்டிருக்கும்பொழுது முன்தொண்டை வாயில் களே சளி அடைத்துக்கொள்ளுகிறது. இங்கிலை நமக்குச் சிறிது அசெளகர்யத்தைத் தருவதுடன் இடைச் செவியிலுள்ள காற்றின் அமுக்கக் குறைவிலுைம் செவிப்பறை உட்புறமாக உப்பிக்கொண் டிருப்பதாலும் கேள்வியும் மந்தப்படுகிறது. படம் 78. நடுச் செவி 1. சுத்தி எலும்பு. 2. பட்டடைச் சிற்றெலும்பு. .ே அங்கவடி எலும்பு (பக்கறை எலும்பு) 4. செவிப்பறை. ஆனல், நாம் விமானத்தில் உயரமாகச் செல்லும்பொழுது இதற்கு நேர்மாமுன நிலை ஏற்படுகிறது. செவிப்பறை வெளிப் புறமாகத் தள்ளப்பெறுகிறது. அதிக உயரமான இடத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/278&oldid=866184" இலிருந்து மீள்விக்கப்பட்டது