பக்கம்:மானிட உடல்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 245 அதன் சுவையைக் கொண்டு அதனை இனங் காணலாம். பிராணிகளின் உணவுகளில் கால்சியம் அல்லது மெக்னீசியம் போன்ற பொருள்களைக் குறைத்துவிட்ட பிறகு, அவை அப் பாருள் குறைவுள்ள நீர் அல்லது உணவில் நாட்டம் செலுத்துகின்றன. அவைகளின் சுவையறியும் திறன் சிதைக் கப் பெற்ருல், அவை எவற்றிலும் நாட்டம் செலுத்துவதில்லை. அவைகளைப் போலவே பல்வேறு உணவுகளைக் குழந்தை களுக்குக் கொடுத்தால், குழந்தைகளும் உடனே அவற்றை விரும்புகின்றன என்ற முடிவினைக் காட்டும் சில குறிப்பிட்ட ஆராய்ச்சிகள் நடக்கப் பெற்றுள்ளன. சுவையுணர்வும் LD 537 உணர்வும் நெருங்கிய உறவுகொண் டிருப்பதால், மேலும் ஒரு குழப்பம் எழுகின்றது. நாம் நல்ல சுவை யுள்ள உணவு என்று கருதுவதெல்லாம், உண்மையில் நாம் அதன் மணத்தையே மதிப்பிட்டு வியக்கின்றவர்களாகின் ருேம். ஜலதோஷத்தின்பொழுது மூக்கு அடைப்பட்டிருப்ப தால், உணவின் சுவையை நாம் சரியாக உணர்வதில்லை. இக் காரணத்தைக் கொண்டே இந்த இரண்டு பொறிகளைப்பற்றி நாம்புப் பாதைகளும் அவற்றிற்குரிய பெருமூளையிலுள்ள இடங்களும் நெருங்கிய உறவு கொண்டுள்ளன என்று ஒரு காலத்தில் கருதப்பெற்றன. எனினும், இன்று சுவையறியும் பொறி புணர்ச்சி நாக்கிற்கும் தொண்டைக்கும் இடையிலுள்ள புலனுணர் நரம்புகளும் செய்கை நரம்புகளும் அமைந்துள்ள வழிகளில் அதிகமாக உறவு கொண்டுள்ளன என்று அறியப் பெற்றுள்ளது. அந்த அமைப்புக்கள் பாய்மத்தின் ஊடகத்தில்தான் செயற்படுகின்றன என்பதை நாம் காணும்பொழுதெல்லாம் நம்முடைய நீர்வாழ் பாம்பரை நினைவுக்கு வருகின்றது. இது சுவை, பார்வை, கேள்வி ஆகிய மூன்று எந்திர நிலைகளுக்கும் பொருந்தும். ஒரு பொருள் கரைசல் நிலையில் இராவிட்டால் அது சுவை யுனர் முடிவுறுப்புக்களைக் தாக்குவதில்லை. மீனின் தோலின் பல பகுதிகளிலும், செவுள்களிலும் வாயி அம் இந்த சுவையுணர் முடிவுகள் அமைந்திருக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/283&oldid=866195" இலிருந்து மீள்விக்கப்பட்டது