பக்கம்:மானிட உடல்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 மானிட உடல் மனிதனிடம் அவை சிறப்பாக நாக்கிலும் முன் தொண்டை யிலும் மட்டிலும்தான் அமைந்துள்ளன ; நாக்கிலுள்ளவை மட்டிலும் மிகவும் சுறுசுறுப்புள்ளவை. நடுத்தாமான அளவுள்ள சுவையுணர்ச்சி குரல்வளை மூடியிலும் உள் தொண் டைப் பகுதியிலும் மதிப்பிட்டு வியக்கப்பெறுகின்றது. ஒரு சுவை யரும்பு (படம் - 75.) கிட்டத்தட்ட கழுத் துக் குறுகிய கூசாவைப் போன்று உருளே வடிவமான காப்ப அணுக்கள் சேர்ந்த தொகுதி யாகும். கழுத்து வழியாக மேற் பரப்பிற்கு வரும் உயிரணுக் களில் மிக மெல்லிய உரோமங் கள் உள்ளன; அவைதாம் சுவை யுள்ள திரவத்துடன் சம்பந்தப் படுகின்றன. எல்லாச் சுவை யரும்புகளும் ஒரே மா கி ரி படம் 75, யாகத்தான் காணப்பெறுகின் ஒரு ஒற்றைச் சுவை யரும்பு. க ை3 ஆல்ை, தனிப்பட்டோ ரிடமுள்ள புகுவாய்கள் பல் வேறுவித சுவை வகைகளால் பாதிக்கப்பெறுகின்றன. நாம் நான்குவித சுவைகளே உணர்கின்ருேம். அவை: இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கைப்பு என்பன. சில குறிப்பிட்ட வேதியல் பொருள்களைக்கொண்டு இவற்றில் ஒன்று அல்லது பலவற்றை செயற்படாத செய்யவும் ஏனையவற்றை அப்படியே விட்டு விடவும் கூடும் என்ற உண்மையில்ை, இவை யாவும் ஒவ் வொரு குறிப்பிட்ட சுவை யரும்புகளுடன் உறவு கொண் டுள்ளன என்பது அறியக் கிடக்கின்றது. உண்மையில் இந்தச் சுவைகளின் தொகுதிகள் ஒன்ருேடொன்று என்ருகக் கலந்திருப்பதால், அவற்றுள் யாதாவதொன்று அதிகப் பட்டா லொழிய, அவற்றைப் பிரித்தறிய முடியாது. உணவில் உப்பு அதிகமாக இருக்கும்பொழுதும் அல்லது உணவில் உப்பே இல்லாதபொழுதும்தான் நாம் உப்பு இன்னது என்பதை அறிய முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/284&oldid=866197" இலிருந்து மீள்விக்கப்பட்டது