பக்கம்:மானிட உடல்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 மானிட உடல் கின்றன. முகுளத்தில் நுழைந்த பிறகு அவை எண்ணற்ற இணைப்புக்களாக அமைந்து, நடுமூளையைக் கடந்து, புறணிச் சுவர் இதழின் கீழ்ப் பகுதியில் முடிவுறுவதுபோல் காணப் பெறுகின்றன ; வாயிலிருந்து வரும் பிற உணர்ச்சிகளே ஏற்றுக்கொள்ளும் இடங்களுக்கு அருகில்தான் அவை முடி வுறுகின்றன. அவைகளேப்பற்றிய நமது நினைவும் கடந்த கால நிகழ்ச்சியுடன் தொடர்புள்ள மிக உயர்ந்த நிலையில் வளர்ந்த உறவும் மூளையிலுள்ள பல்வேறு சம்பந்தப்பட்ட மடிப்புகளுக்குக் காரணங்களாகின்றன. எல்லோரும் எல்லாச்சுவைகளையும் சம அளவில் அறிந்து வியத்தல் என்பது முடியாது. எவ்வளவு பட்டறிவு பெற்றி ருத்தாலும், ஒரு சிறு பகுதியினரிடம் சுவை யறியும் எந்திரத் தன்மை சரியாக அமைவதே இல்லை ; பல்வேறு கிலைகளில் அவர்கள் சுவையை அறியமுடியாதவர்களாக இருக்கின்றனர். இவர்களே கிறக்குருடுள்ளவர்களுடன் ஒப்பிடலாம். ஒருகால் அவர்களிடம் பிறவியிலேயே சில குறிப்பிட்ட புகுவாய்கள் வளர்ச்சியுருமல் இருத்தலும் கூடும். மணம் மணம் அறியும் உணர்ச்சி மனிதனுக்கு மிகவும் குறை வான அளவில் வேண்டப்படுவது; ஆல்ை, அது அவன் சூழ் நிலைகளைச் சரியாக அறிந்துகொள்வதற்குத் துணை செய் கிறது. காற்று உள்ளே இழுக்கப் பெறுங்கால், அது கோக கீழ்ப்பகுதிகளின் வழியாகப் பின் பகுதியை அடைகின்றது ; அது வடிகட்டப்பெற்று சிறிதளவு வெப்புற்ற பிறகுதான் உடனிலையில் மேலறையை அடைகின்றது. இங்கு அது பிரத்தியேகமாக நாம்பு முடிவுகளைத் தாக்குகின்றன (படம்-77.); அஃதாவது மணமறியும் புகுவாய்களைச் சந்திக் கின்றன ; இவை கிட்டத்தட்ட கண் மட்டத்தில் அமைந் திருக்கின்றன. அமைப்பிலும் செயலிலும் அவை நாக்கி லுள்ள சுவையரும்புகளேயொத்திருக்கின்றன. மேற்பரப்பி அள்ள அதிநுட்பமான உரோமங்கள் மணத்துடன் சம்பந் தப்படுகின்றன ; அம் மணப் பொருள் நாக்கில் சுரக்கும். நீரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/286&oldid=866201" இலிருந்து மீள்விக்கப்பட்டது