பக்கம்:மானிட உடல்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை - எலும்பு மண்டலம் 14 எலும்பு உடம்புச் சட்டக வேலைப்பாட்டில் பல்வேறு வடிவக் திலும் பருமனிலும் 206 எலும்புகள் இருக்கின்றன ; அவ் வெலும்புகள் நம் உடலுக்கு உறுதியான, ஆனல் எளிதில் வளையக் கூடிய, ஆதாரமாக அமைந்து மிருதுவான இழையங் களேயும் உறுப்புக்களையும் தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு தனிப்பட்ட எலும்பும் கடினமான அமைப்பு ; ஆனல், நம் முடைய எலும்புகள் மூட்டுக்களால் இணைந்திருப்பதால் நம் உடல் அளவுடன் இயங்குவதற்கு ஏற்றதாக உள்ளது. பல் வேறு எலும்புகளிடையேயுள்ள மூட்டுக்களின் தன்மை நடை பெறும் இயக்கத்தின் அளவையும் தன்மையையும் நிர்ணயிக் கின்றது. இயக்கம் தசைகளால் மேற்கொள்ளப்பெறுகின்றது. எலும்புகள் கொண்டிருக்கும் மச்சையும் (தசைப் பற்றும்) உண்மையில் ஒன்ருேடொன்று தொடர்பற்ற இாண்டு மண்டலங்களாகும். மூன்ருவது அத்தியாயத்தில் விவரித்தது போல மச்சைதான் குருதியணுக்களை உற்பத்தி செய்கின்றது. எலும்புடன் அது கொண்டிருக்கும் ஒரே ஒரு உறவு அஃ துடன் நெருங்கி யிருப்பதுதான். எல்லா எலும்புகளும் புறணி என்ற நெருக்கமான வெளிப்புற அடுக்கைப் பெற்றுள்ளன ; அவற்றினுள் வலைக் கண் போன்ற இணைக்கும் ஸ்பைகுயூல்கள் என்ற பகுதிகள் இருக்கின்றன ; மச்சை அவற்றினிடையே பாத்துள்ளது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/289&oldid=866207" இலிருந்து மீள்விக்கப்பட்டது