பக்கம்:மானிட உடல்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியோட்ட மண்டலம் 21 விரிதலும் சுருங்கலும் திரும்பத் திரும்ப நடைபெற்றுக் கொண்டே யிருக்கின்றன. இதய வால்வுகள் இதயம் திறனுடன் இயங்க வேண்டுமானல், அது வலு வுள்ள வால்வுகளைப் பெற்றிருத்தல் வேண்டும். அதனுடைய மிட்ால் வால்வு, மூவிதழ் வால்வு, பெருநாடி வால்வு, நுரை யீால் வால்வு ஆகிய வால்வுகள் தசை இழையத்தால் ஆனவை அல்ல. அவை யாவும் மிகவும் கெட்டியாகவுள்ள கொல்லா ஜீனஸ் இழையத்தாலானவை. மிட்சல் வால்வு (படம் - 6.) படம் 6. மிட்ால் வால்வின் வரைபடம். (திறந்த நிலையில் தரைமட்டமாக உள்ளது.) 1. தசைநார்க் கயிறுகள். 2. அரும்பு போன்ற தசை. அஃதாவது, இடப்புற ஊற்றறைக்கும் இடப்புற ஏற்றறைக் கும் இடையிலிருப்பது - இரு சம பாகமாக வெட்டப்பெற்ற குதிகுடைபோல் (பாரச்சூட்டு) இருக்கிறது. குதிகுடையின் கம்பிகள் போலிருக்கும் வால்வின் பகுதிகள் தசைநார்க் கயிறு கள் என்று வழங்கப்பெறுகின்றன. இந்தக் தசைநார்க் கயிறு கள் தசை அகைப்புக்களாக இடப்புற அறையின் உட்புறத்தில் கிலேகிலேக்கப்பெற்றுள்ளன. (புகைப்படம் க-ஐப் பார்க்க.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/29&oldid=866209" இலிருந்து மீள்விக்கப்பட்டது