பக்கம்:மானிட உடல்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 மானிட உடல் கருதுவதன் காரணத்தை அறிதல் எளிது. மிருதுவான இழையங்களிலிருந்து ஒர் எலும்பை நீக்கி, தூய்மையாக்கி, கொதிக்க வைக்கலாம் ; ஆயினும், அதன் அமைப்பு மேல் பார்வைக்குக் கேடுருத நிலையிலிருக்கின்றது. எனினும், உயிருள்ள உடலில் யாதேனும் ஒர் உறுப்பைப் போலவே எலும்பும் இயக்க நிலையில்தான் இருக்கின்றது. அவற்றின் உப்புக்கள் தொடர்ந்த நிலையில் படிவதையும் மீண்டும் உறிஞ்சப்பெறுவதையும் சோதனையின் மூலம் காட்டலாம். கதிரியக்கமுள்ள தாதுப்பொருள்களே ஊசி மூலம் செலுத்திய பிறகு அவை செல்லும் வேட்டைக் கவனித்து இதனை அறிந்து WᏜ5fᎢ ©fTöfᎢ©afI Lü. எலும்புக் கூட்டின் வேதியல் இயைபு வயதிற் கேற்ற வாறும், உண்னும் உணவிற் கேற்றவாறும், எண்டோகிரீன் சுரப்பிகள் செயற்படுவதற் கேற்றவாறும் மாறுபடினும், அது பற்றி வாழ்நாள் முழுவதும் நிலவுகின்ற சில பொது விதிகள் உள்ளன. உடலிலுள்ள பாஸ்வாக்கின் பெரும் பகுதியும் 99 சத விகிதத்திற்குமேல் கால்சியமும் எலும்புக் கூட்டில் இருக்கின்றன. உடலிலுள்ள கிட்டத்தட்ட அசைப் பங்கு மெக்னீசியமும் காற் பங்கு சோடியமும் குளோரைடும் எலும்பில் காணப்பெறுகின்றன. இப் பொருள்கள் யாவும் தொடர்ந்து வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருக்கின் றன ; இது உடலின் இயக்க சமநிலையின் ஒரு பகுதிபோல் நடைபெற்று வருகின்றது. துணைப்புரிசைக் சுரப்பிகள் கால்சியம் பாஸ்வாச் சமநிலை யைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவதில் முக்கியமாகப் பங்கு கொண்டுள்ளன. இவற்றைப் பொறுத்துதான் எலும்பு களின் வலிவு அமைகின்றது. மிகச் சிறிதாகவுள்ள இந்தச் சுரப்பிகள் தேவைக்கு மேல் இயங்கினல், எலும்புக் கூடு மிகவும் மிருதுத் தன்மையை அடைகின்றன ; இந்த எலும்பு களேக் கந்தையாலான பொம்மையின் கால்களைப்போல் எளிதில் வளேக்கவும் கூடும் ; முறுக்கவும் கூடும். அதிக சுறுசுறுப் பாக இயங்கும் துணைப்புரிசைச் சுரப்பிகளின் வீக்கம் விளக்கமாகத் தெரிவதில்லை. ஆகவே, அதைத் தேடும் மருத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/292&oldid=866216" இலிருந்து மீள்விக்கப்பட்டது