பக்கம்:மானிட உடல்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 மானிட உடல் எலும்பு வளர்வதாக நாம் கருதுவதில்லை. காரணம், அவ் வெலும்பின் வெளிப்புறப் பருமன் ஒரே மாதிரியாகவே இருக் கின்றது. எனினும், முதிர்ந்தோரின் எலும்புக்கூடும் வளரும் தன்மையுடையது என்பது எலும்பு முறிவு கூடுவதல்ை அறியக் கிடக்கின்றது. ஒடிந்த துண்டுகள் நன்முறையில் ஒன்ருகச் சேர்க்கப் பெற்று அவற்றிற்குத் தேவையாக இருக் கும் இயல்பான அழுத்தமும் இறுக்கமும் அவற்றிற்குத் தசப் பெற்ருல் எலும்பு முறிந்த இடத்தில் கிரும்பவும் வளர்ச்சி யுண்டாகும் தீங்கு உண்டான இடங்கூட கண்டறிய முடி யாதபடி முழு வளர்ச்சியும் ஏற்பட்டுவிடும். எலும்புக் கூடு எலும்பு மண்டல அமைப்பில் (புகைப்படம் - உச-ஐப் பார்க்க.) நீண்ட முதுகுக் கண்டு இருக்கிறது; இந்த முதுகுத் தண்டில் பிரத்தியேகமான வடிவமுள்ள வளையங்கள் வரிசை யாக அமைந்துள்ளன. இந்த வளையங்களே முள்ளெலும்புகள் என வழங்குவர். முதுகுக் கண்டில் கலை, மார்புக் கூடு, இடுப்பெலும்புகள் ஆகியவை இணைக்கப் பெற்றுள்ளன. கீழ்க் கோடியிலுள்ள எலும்புகள் இடுப்பெலும்புகளுடன் சேர்ந் துள்ளன. மேற்கோடியிலுள்ள எலும்புகள் தோள் வலயத்தி லிருந்து நீள்கின்றன ; அதன் பிறகு தோள்வலயம் மார்புக் கூட்டுடன் சேர்கின்றது. எலும்பு மண்டலத்திலுள்ள பல்வேறு மூட்டுக்களும் அமைப்பில் ஒரே மாதிரியாக இல்லை. அவற்றின் இயக்கத்தின் தன்மைக்கும் அளவுக்கும் ஏற்றவாறு அவ்வேறுபாடு அமைங் திருக்கின்றது. எனினும், அம் மூட்டுக்களே செளகர்யத்திற் கேற்றவாறு அவற்றின் செயலை யொட்டி மூன்று பிரிவில் அமைத்துக் காட்டலாம். அவற்றின் அமைப்பில் குறிப்பிடத் தக்க வேற்றுமைகள் செயலின் கட்டுப்பாட்டை அல்லது சுதந்திரத்தை உணர்த்துகின்றன. தட்டையான மண்டை எலும்புகள் போன்ற அசைய முடியாத எலும்புகள்-சினர்த்ரோஸஸ் எனப்படுபவை-நார் போன்ற இழையத்தால் மட்டிலும் பிரிக்கப் பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/294&oldid=866220" இலிருந்து மீள்விக்கப்பட்டது