பக்கம்:மானிட உடல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மானிட உடல் குதிகுடையைப் போன்றுள்ள இரண்டு வால்வு இதழ்களும் ஊற்றறைக்கும் ஏற்றறைகளுக்கும் உள்ள இடைவெளியை மிக இறுக மூடிக்கொள்வதற்கேற்றவாறு தசைநார்க்கயிறுகள் ஏற்றறைகளில் அமைந்துள்ளன. ஒரு குதிகுடை இயங்கும் பாழுது உள்நோக்கிப் பாயும் காற்று குதிகுடையை உப்பச் செய்கின்றது. மிட்ால் வால்வில் வால்வு இதழ்களே உள்நோக்கி வந்து தாக்கும் ஊற்றறையிலுள்ள குருதி அவற்றைச் சரியான நிலைக்குக் கொண்டுவருகிறது. குருதிப் பிழம்பின் தாக்குதலால் இரண்டு வால்வு இதழ்களும் மேல்நோக்கி அசைந்து நடுவில் சந்திக்கின்றன. தசைநார்க்கயிறுகள் அவற் றைச் சரியான நிலையிலிருக்குமாறு மூடிபோல் அமையச் செய்கின்றன. வால்வில் சிறிதும் கசியாதிருப்பதற்கு வால்வு இதழ்களின் ஒாங்கள் மிக அருமையாக அமைந்து மிக நெருங்கி ஒன்ருேடொன்று பிணைந்துள்ளன. வலப்புற ஊற் றறையையும் ஏற்றறையையும் பிரித்துகிற்கும் மூவிதழ் வால்வு அதே விதிமுறையில் அமைந்துள்ளது. அதன் பெயர் குறிப் பிடுவதுபோலவே, அதில் மூன்று இதழ்கள் உள்ளன. பெருநாடி நுரையீரல் நாடிகளின் வால்வுகள் மிட்ால் மூவிதழ் வால்வுகளின் அமைப்பைப்போலன்றி வேறுவிதமாக அமைந்துள்ளன. அவை கீல்கள்போல் உள்ளன. பெரு நாடி இதயத்தின் இடப்புற ஏற்றறையுடன் சேரும் இடத் ல் பெருநாடி வால்வு அமைந்துள்ளது. (புகைப்படம் க-ஐப் பார்க்க.) அது இதய இதழ்களால் ஆனது ; பெருநாடியின் சுவரிலிருந்து கீல்கள்போலமைந்த மூன்று அதைப்புக்களால் ஆனது (படம்-7). இடப்புற ஏற்றறை சுருங்கும்பொழுது, அது ஒரு குருதிப்பிழம்பை இதய இதழ்களைத் தாக்கி அவற் றின் தொங்கும் முனைகளை வெளிப்புறமாகக் தள்ளி பெரு நாடியின் சுவருக்கு எதிராக இயங்கும்படி செய்கிறது : இதல்ை குருதி பெருநாடியில் தாராளமாகப் பாய்கிறது. ஏற்றறை விரியும்பொழுது, பெருநாடியிலுள்ள குருதியின் பின்னேக்கிச் செல்லும் அமுக்கம் இதய இதழ்களைப் பெரு நாடிச் சுவருக்கப்பால் அசைந்தோடச் செய்கிறது. இப் பொழுது அவை பெருநாடிக்கு நேர்கோணங்களில் அமைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/30&oldid=866235" இலிருந்து மீள்விக்கப்பட்டது