பக்கம்:மானிட உடல்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 மானிட உடல் புகள் பன்னிரண்டாகும் ; அவற்றுடன் பன்னிரண்டு சோடி விலா வெலும்புகள் பொருக்கப் பெற்றுள்ளன. வயிற்றுப் புறமுள்ள ஐந்து முள்ளெலும்புகள் வயிற்றின் பின்புறத்தி லமைந்துள்ளன. கிரிகத்திலும் குதத்திலும் முறையே ஒன்று சேர்ந்துள்ள ஐந்து எலும்புத் துண்டுகளும் நான்கு எலும்புத் துண்டுகளும் இடுப்புக் குழியின் பின்புறத்தின் நடுப் பகுதியாக அமைகின்றது. குதத்தை உடனே வெஸ்டிஜியல் வாலாக இனமறிந்து கொள்ளலாம். பக்கவாட்டிலிருந்து பார்க்கும்பொழுது முதுகந்தண் டில் முன்னுேக்கியும் பின்னுேக்கியும் நுட்பமான வளைவுகளைக் காட்டுகின்றன ; ஆல்ை, இரு புறங்களிலும் அவ் வளைவுகள் காணப்பெரு. முதுகந்தண்டு நோாக இருக்கிறது என்று நாம் சொல்லும்பொழுது, முதுகுப் புறமாக பார்க்கும்பொழுதோ அல்லது தொட்டு உணரும்பொழுதோ, நாம் அதன் செங்குக் தான தன்மையைத்தான் குறிப்பிடுகின்ருேம். அசையக் கூடிய முள்ளெலும்புப் பிழம்பாக அமைக் திருக்கும் தனிக் கனியாகப் பிரித்தெடுக்கக் கூடிய இருபத்து நான்கு துண்டுகளும் அமைப்பில் ஒரே மாதிரியாக உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வளையமாக அமைந்திருக்கின்றது. அத னுள்தான் கண்டுவடம் கோக்கப் பெற்றிருக்கின்றது (படம் - 82). முள்ளெலும்பின் முன்பகுதி மிகவும் அடர்ந்த உருளை போன்ற பொருள். அதுதான் முதுகந்தண்டிற்கு வலிவைக் கொடுக்கிறது ; அதில் ஒரு மச்சை யறைகூட இல்லை. முள்ளெலும்பிலுள்ள மச்சை வலைக்கண்போன்ற எலும்பு வேலைப்பாட்டின் குறுகிய பிளவுகளில் பங்கீடு செய் யப் பெற்றிருக்கின்றது ; வலைக்கண்போன்ற எலும்பு வேலைப் பாடுதான் அதற்கு விாைப்பைத் தருகின்றது. முள்ளெலும்பு வளையத்தின் பக்கங்களும் பின்பகுதியும் மெல்லிய அமைப்புக்களாலானவை. ஒவ்வொரு பக்கத்தி லும் ஒவ்வொரு முள்ளெலும்புப் பக்கமுனை நீட்டிக்கொண் டிருக்கிறது. பின்புறத்திலுள்ள முள்ளெலும்பு நடுமுனை எலும்பின் ஒரு பகுதியே என்பதைக் கண்ணுலும் காண லாம் ; விரல்களாலும் தொட்டு உணரலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/300&oldid=866237" இலிருந்து மீள்விக்கப்பட்டது