பக்கம்:மானிட உடல்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை - எலும்பு மண்டலம் 269. திட்டமான அமைப்பிலும், வரையறையுடன் கூடிய பொருத் தத்திலும் அவை எலும்புகளுடன் இணைந்திருக்கின்றன. ஒரு மூட்டை அதன் எல்லையை மீறி வளைத்தாலும் சரி, முறுக்கினலும் சரி, பத்தகங்கள் கிழிந்து போதல் கூடும் ; அல்லது நீட்டப்பெறுதல் கூடும். இம் மாதிரியான சம்பவங் களின்பொழுது உண்டாகும் வலியும் செயற்படா நிலையும் மிக அதிகமாக இருக்கும் : அப் பகுதியில் வெகு விரைவில் தசைப்பிடிப்பும் தோன்றுகிறது. தசை புவிக்கவர்ச்சி இழுப்பு நீங்கலாக உடலிலுள்ள எல்லா அசைவிற்கும் தசையே கர்த்தாவாக அமைந்திருக்கின்றது. (புகைப்படங்கள் உஅ, உகூஐப் பார்க்க.) ஏற்கெனவே இதயத் தையும் உணவுப் பாதையையும் ஆராய்ந்தபொழுது தசை யைப்பற்றி குறிப்பிட்டுள்ளோம். இப் பரப்புக்களில் உள்ள தசைகள் யாவும் இயங்கு கசைகள் ஆகும் ; அவை மிருது வாகவும் உள்ளன. புயங்களேத் தாக்கவும் பாகங்களை அசைக்க வும் பயன்படும் எலும்புக் தசையிலிருந்து அவை அமைப் பிலும் தன்மையிலும் வேறுபடுகின்றன. எலும்புக் கசை இயக்கு கசையாகும்; அவற்றின் நார்கள் வரிகளாகவோ, மேடுகளாகவோ உள்ளன (புகைப்படங்கள் கூ0, கூக-ஐப் பார்க்க). தசை தான் சேர்க்கப்பெற்றிருக்கும் இரு இடங்களுக் கிடையிலுள்ள தாரத்தைக் குறைத்துகொள்வதற்குச் சுருங்கி யும் தளர்ந்தும் பிகுவை நிலைநிறுத்தியும் தன் வேலையை முற்றுவித்துக்கொள்கிறது. சுருக்கமும் நீட்சியும் உடனே அறிந்துகொள்ளக் கூடியனவாக உள்ளன. தசைகள் அசை வில் செயற்படாதபொழுது இருக்கக் கூடிய வன்மையே பி.குக்தன்மை என்பது. நாம் தாங்கும்பொழுதுகூட ஒரளவு பி.குக்தன்மை நிலவுகின்றது. இறந்த பிறகு அல்லது ஒருசில வகை பக்கவாதத்தின் பொழுதுதான் தசைக்தளர்வு முற்றுப் பெறுகின்றது. நீண்ட மெல்லிய நார்களின் கற்றைகளால்தான் எலும் புத்தசை அமைகின்றது : இந்த மெல்லிய நார்கள் இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/307&oldid=866251" இலிருந்து மீள்விக்கப்பட்டது