பக்கம்:மானிட உடல்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசை - எலும்பு மண்டலம் 27 1 இணைந்துள்ளன ; இத்தசை நாண்கள் மிகவும் வலிவுள்ளவை. காம் முஷ்டியைக் கிறக்கும்பொழுதும் மூடும்பொழுதும் கையின் பின்புறம் இத்தசை நாண்கள் அசைவதைக் கண்ணுற லாம். முகத்திலுள்ளதைப்போல் ஒருசில தசைகள் தோலு டன் இணைந்திருக்கின்றன ; உடலில் எங்கும் காணப்பெருத எடுப்பான இயக்கு நிலை அசைவை அவை பெற்றுள்ளன. நாம் முகத்திலுள்ள தோலின் தோற்றத்தை மாற்றிக்கொள் வதுபோல் புயத்திலுள்ள தோலின் தோற்றத்தையோ அல்லது மார்பிலுள்ள தோலின் தோற்றத்தையோ மாற்றிக் கொள்ள இயலாது. இயக்குகசை மலவாயிலுள்ளதைப் போன்ற சுருக்க முள்ள வாேயமாகவும் அமையலாம். நாக்கு இயக்கு தசையே. அது எலும்புகளே அசையச் செய்ய வேண்டியதில்லை ; ஆயி லும், அகன் அசைவு யாரிடமும் மிக நல்ல கட்டுப்பாட்டி னுள் அடங்கியிருக்கின்றது; சில சமயம் அது சிறிதும் சோர் வுருமைக்கு வருந்தவும் செய்கின்ருேம் ! தசையின் இணைப்புக்களிலிருந்து, அஃதாவது நிலைத் திருக்கும் எலும்பின்மேலுள்ள அதன் மூலம், அது அசைக் கும் எலும்பின் மேலுள்ள அதன் இடைச் சேர்க்கை ஆகிய வற்றிலிருந்து, நாம் ஒரு தசை சுருங்கும்பொழுது எந்த அசைவை உண்டாக்குகிறது என்பதை நிர்ணயிக்க முயலுவ தில் விருப்பங்கொள்ளுகின்ருேம். ஆனல், இது சில சமயம் தான் முடியக் கூடியது. ஏதாவது ஒரு திசையில் உடலை அசைத்தல் என்பது தேவைப்படி நடக்கும் குழுச் செய்கை யாகும். நாம் விரும்பும் திசையில் குறிப்பிட்ட பகுதியை இழுத்துக்கொள்வதில் ஒன்று அல்லது பல தசைகள் முக்கிய மாகப் பங்குகொள்கின்றன. ஆனல், வேறு தசைகள் ' கிலேத்த பகுதியை அதே இடத்தில் அசையாதிருக்கு மாறு பிடித்துக்கொள்ளத் தவறினல், அசையும் செயலில் முக்கியமாகப் பங்குகொள்ளும் கசை பலனற்றுதான் செயற் பட வேண்டும். இவ்வாறு நிலைநிறுத்துவதில் செயற்படும் தசைகளே நிலைநிறுத்தும் தசைகள் என்று வழங்குவர். 'எதிர்கிலேயில் செயற்படும் தசைகளும் உள்ளன; அசைவதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/309&oldid=866255" இலிருந்து மீள்விக்கப்பட்டது