பக்கம்:மானிட உடல்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியோட்ட மண்டலம் 23 சிறிது திறந்த நிலையில்: மூடிய நிலையில். படம் 7. பெருநாடி வால்வின் வரைபடம். ஏற்றறையின் வெளிநோக்கித் திறக்கும் அடைப்பை ஒரு விதானம் செய்வதுபோல் இறுக்கமாகச் சேர்த்துப் பிடித்துக் கொள்கின்றன. இவ்வாறு பெருநாடியிலுள்ள குருதி திரும்பவும் இதயத்தினுள் பாயாதவாறு தடுக்கப்பெறு கின்றது. நுரையீரல் வால்வும் வலப்புற ஏற்றறையுடன் இணைந்துள்ள இம் மாதிரியான கீலே. வால்வு இதழ்களையோ இதய இதழ்களேயோ ஏதாவது ஒன்று தாராளமாக அசை வதைத் தடுத்தால் அல்லது அவற்றின் வடிவத்தைக் குலைத் தால், அவை இறுக்கமாக இராததால் சரியாக இயங்க முடியாது. இதய போஷிப்பு இதயத்தின் தசைகள் புதிதாக உயிரியத்தை உண்ட குருதியால் போஷிக்கப்பெறுகின்றன; இக் குருதி வலப்புறக் கிரீடநாடி இடப்புறக் கிரீடநாடி என்ற இரண்டு பாய்குழல் கள் வழியாகக் கொண்டுசெல்லப் பெறுகின்றது. இந்தப் பாய் குழல்கள் பெருநாடியினின்றும் முதன் முதலாகப் பிரிந்து செல்லும் கிளைகளாகும். இக்குழல்களின் திறப்புக்கள் பெரு நாடி வால்விற்குச் சற்று மேற்புறமாக இருப்பதைக் காண லாம். இதயம் விரியுங்கால் இக் கிரீடாடிகளில் குருதி கிம்பி இதயத்தைப் போவிக்கும். ஏனைய பாய்குழல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/31&oldid=866257" இலிருந்து மீள்விக்கப்பட்டது