பக்கம்:மானிட உடல்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 மானிட உடல் களின் பல்வேறு உறுப்புக்கள் பல்வேறு நிலைத்த இடங்களில் இழுத்தல் கூடும். முழங்கையை மடக்குவதில் பிராஸியா லிஸ், பிராஸியோரேடியாலிஸ் எனப்படும் வேறு இரண்டு மடக்குத் தசைகளுடன் இருதலைத் தசை சுருங்குகின்றது. இருதலைத்தசையும் கையை மலர்த்தலால் அல்லது கிருப்புத லால், நாம் விரும்பாவிடில் அவ்வாறு திருப்பும் செய்கை எதிர்க்கப்பெறுதல் வேண்டும். சுருங்குதலின் வலிமையை உயர்த்துவதற்குத் தோளின் நிலைநிறுத்தும் தசைகள் விசைப் பாக முடுக்கப்பெறுதல் வேண்டும். முஷ்டியை மடக்குதலும் தோள் தசைகளைச் சுருக்குதலும் இருதலைத் தசை கடின மாகவும் அது சுருங்கும்பொழுது துருக்திக்கொண்டிருக்க வும் எவ்வளவு தாாம் துணைசெய்கின்றன என்பதை நாம் உணர்வோம். இதன் மறுதலைச் செய்கை, அஃதாவது முத்தலைத் தசை முக்கியமாகப் பங்குகொண்டு முழங்கையை நீட்டுவது, சிக் கல் குறைந்த செய்கையாகும் காரணம், அது பலமற்ற அசைவு ஆகும். எனினும், முத்தலைத் தசை மட்டிலும் நீட்டு தசையாகச் செயல்புரிகிறது என்று கினைத்தல் தவறு. நிலைத் திருக்கச் செய்வதும் சினர்ஜெட்டிக் செயலும்கூட தேவைப் படுகின்றன. சில சமயங்களில் ஒருவழிப்படுத்திய தசைச் செயல்கள் அசையும் பகுதியிலிருந்து சிறிது தாாத்திலிருக்கின்றன. விரல் மடக்கப்பெறும்பொழுது, தோளும் புயம் முழுவதும் நிலையாக வைக்கப்பெற்று முத்தலைத் தசையும் இருதலைத் தசை யும் நிலைநிறுத்தும் தசைகளாகச் செயற்படுகின்றன. வேறு தசைகள் மணிக்கட்டு வளைவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்; சினர்ஜிஸ்டுகள் விரல்களின் மடக்குத்தசைப் பகுதியை எதிர்த்துச் செயல்புரிவதால், அவை இவ்வேலையைச் செய் கின்றன. இந்த எல்லாத் தசைகளின் சுருக்கங்களின் தளர்வு மடக்கிய முஷ்டியைத் திறப்பதற்குத் துணை செய்கின்றது. நாம் ஒற்றைத் தசைச் செயலைப்பற்றி அறிந்துகொள்வ தில்லை. ஒருவழிப்படுத்தப்பெற்றுள்ள பல தசைகள் பங்கு கொண்டுள்ள அசைவை எவ்வாறுசெய்ய வேண்டும் என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/312&oldid=866262" இலிருந்து மீள்விக்கப்பட்டது