பக்கம்:மானிட உடல்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 மானிட உடல் களுக்கும் ஆதாரமாக இருக்கும் இழையமாகும். இதனல் அசைவும் கட்டுப்படுத்தப்பெறுகின்றது ; சாயல்களும் நிலை நிறுத்தப்பெறுகின்றன. தசையின் 75 சதவிகிதம் சோலானது ; கிட்டத்தட்ட 20 சதவிகிதம் பி.சிதத்தாலானது. ஆனல், பைபிரில் மட் டிலும் பெரும் பகுதி பல்வேறு பிசித வகைகளாலானது. தசை சுருக்கத்தில் பங்குகொண்டிருக்கும் முக்கியமான பிசி தம் ஆக்டோமயோஸின் எனப்படும் சிக்கலான பிசிதம் ஆகும். அடெனுேஸின்டிாைபாஸ்பேட் (அ. டி. பா.) எனப் படும் அதிக ஆற்றலைக்கொண்டுள்ள பொருளிருக்கும் பொழுது ஆக்டோமயோஸின் தன் உருவத்தை மாற்றிக் கொண்டு சுருங்கக் கூடும், அல்லது தளர்வுறக் கூடும். அ. டி. பா. என்பது வளர்சிகை மாற்றம்’ என்ற பொருளே ஆராய்ந்த பொழுது ஆற்றல்கரும் அம்சத்தை யொட்டி ஆராயப் பெற். றது. கசைார்களின் சுருக்கங்கள் அசைவை உண்டாக்குவ அடன் சூட்டையும் கருகின்றது. உடல் சூட்டோடு இருக்க வேண்டுமானுல் அசைவு ஏற்பட வேண்டும் என்பதை ஒவ் வொருவரும் அறிவர் ; கசைச்செயல் அதிகமாவதற்கேற்ற வாறு நம் உடலில் சூடும் அதிகமாக உண்டாகின்றது. தசைநார்களும் பைபிரில்களும் ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் தாம் செய்யும் வேலையின் அளவிற்கேற்றவாறு தம் பருமனே மாற்றிக்கொள்ளுகின்றன. பாலட் நடனம் என்ற நடனத்தில் பங்கு கொள்பவரின் புடைத்துக்கொண் டிருக்கும் கன்றுத் தசை இதற்கு ஒர் எடுத்துக்காட்டாகும். அக்கசை நாளடைவில் பருத்துப் போகின்றது. அதே தசை கால் பக்கவாதத்தால் பீடிக்கப்பெற்ருலும் அல்லது தனியாக வைக்கப்பெற்ருலும் விரைவில் பட்டுப்போகின்றது, அல்லது ஊட்டமின்றி அழிந்துபோகின்றது. ஒருகால் செயற்படும் தசையிலும் செயற்படாத தசையிலும் குருதியோட்டம் நடை பெறுவதில் உள்ள வேற்றுமைதான் ஒரளவு அதன் பருமனே நிர்ணயிக்கின்றது.

  • பக்கம் - 122-123.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/314&oldid=866266" இலிருந்து மீள்விக்கப்பட்டது