பக்கம்:மானிட உடல்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோல் 15 உடலிலுள்ள இழையங்களில் அதிகமாக நீர் இருப்பது உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதவைகளுள் ஒன்று. உயி ருள்ள இழையங்கள் ஒரு பொழுதும் ஒய்வாக இருப்பதில்லை. எப்பொழுதும் ஏதாவது ஒரு வளர்சிதை மாற்றச் செயல் நடைபெற்றுக்கொண்டே யிருக்கிறது ; அதன் பொருட்டு உயிரணுக்கள் கட்டுப்படுத்தப்பெற்ற பாய்ம நிலையில் இருக்க வேண்டும். நீரைச் சமநிலையில் ஒழுங்கு பெற்றிருக்கச் செய்தல் என்பது ஒரு சிக்கலான விஷயம் ; இதைப்பற்றி ஏற். கெனவே சிறு நீரகங்கள், குடல், துரையீரல்கள் ஆகியவற்றின் மூலம் கழிவுப் பொருள்கள் அகற்றுதலே ஆராய்ந்தபொழுது குறிப்பிட்டோம் ; வளர்சிதை மாற்றம்’ என்ற அத்தியாயத் திலும் அது குறிப்பிடப்பெற்றது.1 ஈர நிலையில் இருக்கும் இழையங்களின் கொள்கலனுக தோல் பங்கு பெற்றிருப்பதை அதிகமாக வற்புறுத்தி உரைக்க வேண்டியதில்லை. உடல் ஈரமாக இருக்கிறது ; ஆனல், அது காற்றில் நிலைபெற்றிருக்க வேண்டும். தோல் உடல் ஈரத் திற்கும் காற்றிற்கும் இடையே மிக முக்கிய அரணுக இருந்து வருகின்றது. உடலின் பரப்பில், பெரும்பகுதி ப்ேபுண்ணின் காரணமாக இழக்கப்பெற்ருல் பங்கப் படுத்தப்பெற்ற இழை யங்களிலிருந்து பாய்மம் கசிதல் ஊறுபட்டதன் மிகக் கடுமை யான விளைவுகளுள் ஒன்ருக இருக்கிறது.

  • பக்கம் - 71-72 ; 93 ; 112 +பக்கம் - 129
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/315&oldid=866268" இலிருந்து மீள்விக்கப்பட்டது