பக்கம்:மானிட உடல்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 மானிட உடல் மேல்தோல் தோலின் மேல் அடுக்கு அல்லது மேல் தோல் மிக வியக்ககு முறையில் பாதுகாப்பு உறையாக அனுசரித்துக் கொள்ளுகிறது (படம் - 90). அது எல்லா இடங்களி அம் தளவரிசைபோல் தட்டையாக்கப் பெற்றுள்ள பல்வேறு அடுக்குகளைக் கொண்டது. இந்நிலையை அடுக்கடுக்கான செதிளுள்ள எபிதீலியம்’ என்ற சொற்ருெடால் குறிப் படம் 90. தோலும் அதன் கீழுள்ள இணைக்கும் இழையமும். 1. மேல் தோல். 2. அடித் தோல். 3. தோலடியிலுள்ள இணைக்கும் இழையம். பிடுவர். சதா வளர்ந்துகொண்டே யிருக்கும் உயிரணுக்கள் மேல் தோலின் அடிப் பகுதியில் அமைந்துள்ளன ; இங்கி ருந்து அவை வெளி நோக்கியும் மேற்பரப்பை நோக்கியும் பிரிகின்றன. வெளிப்புறமாக வருங்கால் அவை படிப்படியாக தன்மையில் மாறுகின்றன. அவற்றின் ஊட்டம் கீழிருந்து வருவதால் இம்மாற்றம் நிகழ்கிறது. மேல் தோலில் குருதிக் குழல்கள் இல்லை; மேலாக ஏற்படும் வெட்டுக் காயத்தில் இங் நிலையைக் காணலாம். எனவே, வெளிப்புற இறுதி அடுக்கு களில் இருப்பவை இறந்த உயிரணுக்கள் அவற்றில் அதிக அளவு பிசித கொாடின் ' என்ற பொருள் இருக்கிறது. வாழ்க்கையில் நேரிடும் பல்வேறு அலுவல்கள் நிமித்தம் நாம் வெளியே செல்லும்பொழுது, இறந்த இந்த உயிரணுக்கள் சதா தேய்ந்து உதிர்கின்றன. எனவே, தோல் தொடர்ந்து அடியிலிருந்து புதிதாக வளர்ந்துகொண்டேயிருப்பதால், நாம் தொடர்ந்து தோலை உதிர்த்துக்கொண்டே இருக்கின்ருேம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/316&oldid=866270" இலிருந்து மீள்விக்கப்பட்டது