பக்கம்:மானிட உடல்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மானிட உடல் யாவும் இதயம் சுருங்கும்பொழுதுதான் பெரும்பான்மை யான குருதியை ஏற்றுக்கொள்ளும். இதயம் விரியுங்கால் இந்தக் கிரீட நாடிகள் குருதியை நிரப்பிக்கொள்வதற்கு இரண்டு காரணங்கள் உள. இதயம் சுருங்குங்கால் அவற்றின் தசைகளும் சுருங்குகின்றன : கிரீடநாடிகளின் கிளைகளாகவுள்ள குழல்களையும் சுருங்கச் செய்கின்றன. அன்றியும், இதயம் சுருங்கும்பொழுது பெருநாடியிலுள்ள குருதி இதயத்திற்கு அப்பால் மிக விரைவாகச் சென்றுகொண்டிருக்கிறது; மிகக் குறைந்த அளவு குருதி மட்டிலும் இதயத்தின் கிரீடக் குழல்களில் நுழைகின் றது. இதயம் விரியும்பொழுது பின்னுேக்கிச் செலுத்தப் பெறும் அமுக்கத்தால் இக் கிரீடக்குழல்களில் கணிசமான அளவு அதிகமான குருதி செலுத்தப்பெறுகின்றது. குருதி வட்டம் மேலே குறிப்பிட்டவாறு, இதயம் ஒரு தனிக் கருவி யாக இருப்பினும் அது தனி நிலையில் பிரிந்து கிடக்கும் இரண்டு பம்புகளைக் கொண்டுள்ளதாகக் கருதலாம். வலப்புற இதயம் உடலெங்குமுள்ள நாளக்குருதியை ஏற்று அதனை துரையீரல் நாடி வழியாக துரையீரலுக்குள் பாய்ச்சுகிறது. (புகைப்படம் டு-ஐப் பார்க்க.) நுரையீரல் நாடி என்பது நாளக்குருதியைக் கொண்டுசெல்லும் ஒரு குட்டையான கிளே நாடியாகும். இந்த நாடியிலுள்ள குருதி அமுக்கம் உடலில் ஏனேய நாடிகளிலுள்ள குருதி அமுக்கத்தைவிடக் குறைந்திருக்கும். துரையீரல் வழியாகப் பாய்ந்து செல்லும் குருதி, உடலெங்குமுள்ள ஏனைய உறுப்புக்கள் வழியாகப் பாய்ந்து செல்லும் குருதியைவிட குறைந்த அளவு தடையையே சந்திக்கின்றது. ஆகவே, வலப்புற ஏற்றறை இடப்புற ஏற்றறையைவிட சாதாரணமாகக் குறைந்த அளவு ஆற்றலுடன்தான் சுருங்குகிறது ; அது ஒரே அளவுள்ள குருதியைப் பீச்சிலுைம், குறைந்த தசையையே கொண்டுள் ளது. குறைந்த ஆற்றலுடன் சுருங்குவதல்ை துரையீரல் நாடியில் குறைந்த அளவு அமுக்கத்தை விளைவிக்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/32&oldid=866277" இலிருந்து மீள்விக்கப்பட்டது