பக்கம்:மானிட உடல்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 மானிட உடல் வதற்கு அவை உதவுகின்றன. நம்முடைய ஒருவழிப்படுத் தப்பெற்ற எல்லா அசைவுகளும் அவ்வாறு தெரிந்துகொள்ளும் நிலையைப் பொறுத்திருக்கின்றன. ஒரு பகுதியில் ஊறு நேரிடாமல் நம்மை எச்சரிப்பதற்கு வலியுணர்ச்சி தேவைப் படுகிறது. ஏதாவது நோயின் காரணமாக நாம்புணர்ச்சியை இழந்துவிட்டால், அவ்வுணர்ச்சி இழப்பின் காரணமாக அனம் புண்கள் அல்லது காயத்தாலேற்படும் ஊறுகள் அடிக்கடி ஏற்படக்கூடும். காரணம், உணர்ச்சியின்மைதான். படம் 91. உரோம உறைகளும் எண்ணெய்ச் சுரப்பிகளும். 1. உரோமக் காம்பு 2. மேல் தோல். 3. உரோம உற்ை. 4. எண்ணெய்ச் சுரப்பிகன். 5. அடித்தோல். மேல்தோலில் உண்டான உரோம உறைகள் (படம்-91.) உரோம வேர்களின் பிடிகளாக அமைகின்றன. அவற்றின் எபிதீலிய அணேச்சவ்வுகள் உரோமத்தையே உண்டாக்குகின் றன. ஒவ்வொரு உரோம உறையின் திறப்பிலும் எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளன ; அவை தரும் எண்ணெய் போன்ற பொருளால் தோல் மிருதுவாகவும், வளையக் கூடியதாகவும் ஊடுருவிச் செல்லக் கூடியதாகவும் அமைகிறது. வேர்வைச் சுரப்பிகள் (படம் -92.) அடித்தோலில் மிக ஆழத்தில் அமைந்துள்ளன ; அவற்றின் நட்பமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/320&oldid=866279" இலிருந்து மீள்விக்கப்பட்டது