பக்கம்:மானிட உடல்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைச்சொற்கள் (விளக்கக் குறிப்பு) 291 அணுக்கள் அதிகரித்து ஒர் உறைபோல் சூழ்வது. இவ்வுறை தான் கிராபியன் உறை. கிரிகாய்டு குருத்தெலும்பு (cricoid cartillage). குரல்வளை யைச் சுற்றிலுமுள்ள வளையம் போன்ற எலும்பு. கிரெளசேயின் முடிவுக்குமிழ் (Krauses end bulb). பிரத்தி யேகமாக அமைக்கப்பெற்றுக் குளிர்ச்சியைக் கடத்தும் நாம்புத் தொகுதி. கிலியா (glia). நாம்பு மண்டலத்தில் நாம்பு அணுக்களைத் தவிர இணைக்கும் இழைய அணுக்கள் போன்ற அணுக்கள். கிளிசெரால் (glycerol). ஒர் அங்கக வேதியற் பொருள். உடலி லுள்ள கொழுப்பிலிருந்து உண்டாவது. குடலிணைச்சவ்வு (mesentary). குடலைப் பின்புறமாக இணைத் துக்கொண்டிருக்கும் மெல்லிய சவ்வுபோன்ற இழையம். இதன் மூலம்தான் குடலில் குருதியோட்டம் நடைபெறுகின்றது. குரோமோஸோம்கள் (chromosomes). உடலிலுள்ள அணு இரண்டாகப் பிளவுபடும்பொழுது குச்சிகள் போல் மாறிய நிலையி லுள்ள பகுதிகள். தமிழில் இவற்றை உயிரணுக்கோல்கள் என வழங்கலாம். இவை குடிவழி உயிர் மின்னியைச் சுமந்துசெல்லும். குளொபுவின்கள் (globulins). நீர்க் குருதியிலுள்ள ஒரு வகைப் பிசிதங்கள் ; நோய்கள் வாாாது தடுப்பதற்குப் பயன்படுபவை. கூடல்வாய் (synapse). இரண்டு நாம்பு அணுக்களுக்கு இடையி லுள்ள இடைவெளி சேரும் இடம். இதன் மூலம்தான் நாம்புத் துடிப்பு செலுத்தப்பெறுகின்றது. கெராட்டின் (keratin) கொம்பு, நகம், மயிர் போன்றவற்றி லுள்ள கெட்டியான இழையம் உண்டாவதற்கான அடிப்படைப் பொருள். &#10Gl_r G6gsofi, gavn i Guersir (gametogenic hormone). அடித்தலே முன்சுரப்பியில் ஊறும் கோனடோட்ரோபின் களில் முதலாவது. ஆண்களிடம்தான் இது சுரக்கும். சுக் கிலத்தைச் சாக்கும் சிறுகுழல்களில் விாைப்புழுக்கள் பக்குவ மடையத் துணைபுரியும். கைரி (gyri) பெருமூளையிலுள்ள உழவு சால்கள் போன்ற பள் ளங்களில் உள்ள சுருக்கம். மூப்பின்பொழுது இது இன்னும் சுருங்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/329&oldid=866297" இலிருந்து மீள்விக்கப்பட்டது