பக்கம்:மானிட உடல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருதியோட்ட மண்டலம் 25 துரையீரலில் குருதி உயிரியத்தை உட்கொண்டவுடன், துரையீரல் நாளத்தின் மூலம் இடப்புற இதயத்திற்குச் செல்கிறது. இடப்புற ஏற்றறை உயிரியக்கை உண்ட குருதி யைப் பெருநாடிக்குப் பாய்ச்ச, பெருநாடி அதனை உடலெங் கும் பிரித்தனுப்புகிறது. (புகைப்படம் ச-ஐப் பார்க்க.) இடப் புற ஏற்றறையினின்றும் பெருநாடியில் தழையும் குருதி பெருநாடியின் வழியிலுள்ள எண்ணற்ற பாய் குழல்களின் வழியாகப் பீச்சப்பெறுகின்றது. உயிரியத்தை உண்ட குருதி யைக் கொண்டு செல்லும் இப் பாய்குழல்கள் பல்வேறு வகைப்பட்ட உறுப்புக்களில் நுழைந்து மிகச் சிறிய கிளேக ளாகப் பிரிகின்றன. இக்கிளைகள் இன்னும் மிகச் சிறிய குழல்களாகப் பிரிந்து துண் புழைகளாக முடிகின்றன. (படம்-8). நுண்புழைகளில் குருதி செல்லும்பொழுதுதான் குருதியிலுள்ள உயிரியம் இழைய அணுக்களால் விடுவிக்கப் பெற்றுப் பயன்படுகிறது. துண் புழைகளின் தொகுதிகள் ஒன்றுசேர்ந்து மிகச் சிறிய நாளங்களாகின்றன; இவை திரும்பவும் சற்றுப் பெரிய நாளங்களாக ஒன்று சேர்கின்றன. நாடிக் குருதியைவிடக் குறைந்த அளவு உயிரியத்தைக் கொண்ட நாளக் குருதி மேற்பெரு வடிகுழல் மூலமாகவும் கீழ்ப்பெரு வடிகுழல் மூலமாகவும் வலப்புற ஏற்றறைக்கு மீண்டும் கொண்டுவரப் பெறுகின்றது. இதுதான் குருதி மண்டலத்தின் வழியாகச் செல்லும் குருதிவட்டத்தின் பாதையாகும். நாடிகள், சிறு நாடிகள், நுண்புழைகள், நாளங்கள் ஆகியவை பல்வேறு விதமாக இயங்குகின்றன. எனினும், காம்புக் கட்டுப்பாடும், ஹார்மோன் கட்டுப்பாடும், வேதியல் கட்டுப்பாடும் அவற் மின் தனிப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்து இயங்கச் செய் கின்றன. பாய்குழல்கள் பெரு நாடியிலிருந்து பல கிளைகளாகவும் பல நுண்ணிய சிறு கிளேகளாகவும் பிரியப் பிரிய அவற்றின் அமைப்பு மாறுகின்றது. எனினும், ஒற்றையடுக்கு உயிரணுக் களைக் கொண்டே உள் சவ்வு ஒன்று அவற்றில் எப்பொழு தும் இருக்கத்தான் செய்கிறது. இந்தச் சவ்வு குருதி எளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/33&oldid=866299" இலிருந்து மீள்விக்கப்பட்டது